பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

திருக்குறள் கட்டுரைகள்


வள்ளுவரும் விரைந்து காட்டியிருப்பது நம் உள்ளத்தை யெல்லாம் மகிழ்விக்கிறது.

“உடையைக் கண்டு, உணவைக் கண்டு” என்று கூறாமல், உடுப்பதைக் கண்டு, உண்பதைக் கண்டு என்று வள்ளுவர் கூறியிருப்பது பொருள் அமைதியுடையதாகும், பின்னதற்குப் பெயர் ஆசையாகாமல், கயமையாகவே அமைவதைக் கண்டு களியுங்கள்.

“மக்கள் என்பவர் தம்மிடத்து உள்ள குறைகளையே காணத் துடிப்பவர். ‘கயவர்’ என்பவர் அவ்வாறு இல்லாமல், சும்மாவும் இராமற் பிறரிடத்து இல்லாத குறைகளையுங்காணத் துடிப்பவர்” என்பது இக் குறளின் கருத்து. இவ்வுண்மையை இக் குறளிலுள்ள “பிறர்மேல் வடுக்காண” என்பது நன்கு விளக்கிக் கொண்டிருக்கிறது.

பொறாமை, புறங்கூறல் தீமை முதலிய பல தீச் செயல்களை வெறுத்து ஒதுக்கக்கூடிய அறத்துப்பாலிலும் கயமையைப் பற்றிக் கூற வள்ளுவர்க்கு மனமில்லை யென்று தெரிகிறது. பொருட்பாலிலுங்கூட முதலில் இடையிற் கூறாமல் கடைசி அதிகாரமாகவே கூறியிருப்பதிலிருந்து, கயவர்களை வள்ளுவர் கீழ்களுக்கெல்லாம் மிக்க கீழாகக் கருதியிருக்கிறார் என்பது நன்கு விளங்குகிறது.

கயமைக்குணம் ஆண்களிடத்தில் மட்டுமின்றி பெண்களிடத்துங் காணப்படும். அவர்கள் கயவர்களல்லர்; கயத்திகள். கயவன், கயத்தி ஆகிய இருபாலரையுஞ் சேர்த்து வள்ளுவர் ‘கீழ்’ என்றார். நாலடி நூல் மிக நயமாக ‘கயம்’ என்கிறது. எங்கள் வீட்டுக் குழந்தை இதுகளை “108” என்கின்றனர். காரணம் இவ்வதிகாரத்தின் எண் “108” என்பதே.

கயத்தை எவ்வாறு தண்டிப்பது என்பதை ஆசிரியர் நல்லாதனார் ஆராய்ந்து கூறியிருக்கிறார் அஃது ‘இரும்