பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கூத்தாட்டு அவைக்குழாம்

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிங் தற்று.

என்பது திருக்குறளில் ஒரு குறள். “செல்வம் நிலையாது; அஃது அழிந்துவிடும்” என்பது இதன் கருத்து!

இது நிலையாமை என்ற தலைப்பில் வந்த ஒன்று. இவ்வுலகில் தோன்றும் பொருள்கள் அனைத்துமே ‘அழியக் கூடியன’ என்பதே நிலையாமை என்பதன் பொருள்.

”நிலையில்லாதவைகளை நிலைத்து நிற்கக் கூடியவை என எண்ணுவது அறிவுடையவர்க்கு இழிவு” என்று முதற் குறளிற் கூறிய வள்ளுவர், அடுத்து, ”நிலைத்து நில்லாதவைகளில் செல்வமும் ஒன்று” என்று இக்குறளிற் கூறுகிறார்.

”குறைந்த செல்வம் ஒருகால் அழியலாம். நிறைந்த செல்வம் எப்படி அழியும்?” என்று நினைப்பவரை நோக்கியே எச்சரிக்கை செய்கிறது இக்குறள். ”அஃது எவ்வளவு பெரிய செல்வமாயினும் அழிந்து போய்விடும்” என்று.இதை இக்குறளில் உள்ள பெருஞ்செல்வம் என்பது மெய்ப்பிக்கும்.

ஒரு பெருஞ்செல்வம் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு வள்ளுவர் ‘நாடகக் கொட்டகைகளில் மக்கள் திரண்டு வந்திருப்பது போல’ என்று விடை கூறியிருப்பது பெரிதும் வியக்கக் கூடியதாகும்.

எங்கெங்கோ மக்கள் பெருங்கூட்டமாகக் கூடியிருக்க, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, நடிப்பதைக் கண்டு