பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரந்து வாழும் வாழ்வு

37


திருவள்ளுவர், பொய் கூறிப் பொருள்தேடி வாழும் மக்களைப்பற்றியும் ‘கரவிரவு, என, ஒரு தனி அதிகாரம் வகுத்துக் கூறியிருந்தால், இன்று நன்றாக இருந்திருக்கும்.

கரவிரவில் வாழும் மக்கள் அக்காலத்து இல்லாமையே வள்ளுவர் கூறாமைக்குக் காரணம் எனத் தெரிகிறது. கரவிரவில் வாழும் மக்கள் அக்காலத்தும் வாழ்ந்தனர். எனக்கருதினால், அத்தகைய மக்களைக் குறித்து, “மக்களே போல்வர் கயவர்” என, அவரும் கரந்து கூறியிருக்கிறார் என்றே கருதுதல் வேண்டும். இரப்பதன் இழிவைவிடக்கரந்திரந்து வாழும் வாழ்வின் இழிவு கடுமையானதென நன்கு தெரிகிறது.

உண்மையைச் சொல்லியோ, பொய்யைச் சொல்லியோ இரந்து வாழும் மக்கள் பெருகுவதற்கு வறுமையே பெரிதும் அடிப்படையாகும். அதை ஒழிக்க வழி காண்பவனே அறிஞன். அதைக் கொல்லத் திட்டம் போடுபவனே படைத் தலைவன். அதைக் கொள்பவனே வீரன். அதை ஒழித்த மக்களே மக்கள். அஃது ஒழிந்த நாடே நாடு!

கடும் போரிட்டே இரப்போரை ஒழிக்க வேண்டும். இரப்போர் ஒழிந்த நாட்டிற்குள் எப்போரும் தலை காட்டாது.

பொய்யாக இரத்தல், உண்மையாக இரத்தல் என இரப்பில் இருவகை இருப்பது போல, இரந்து வாழும் மக்களிலும் இருவகை உண்டு. வறுமைப் பிணி உள்ளோர் ஒரு வகை; உடற் பிணியுள்ளோர் மற்றொரு வகை. அரசாங்கமும், செல்வருங் கூடினால் இந்த இருவகைப் பிணியையும் ஒழித்துவிடலாம்.

பிச்சை எடுத்து உண்டு வாழும் இருநிலையானது அடிமை நாடுகளில் இருக்கலாம்; தன்னுரிமை பெற்ற ஒரு