பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

திருக்குறள் கட்டுரைகள்


வயிற்றுள் கள்ளிருந்து அறிவில் வெறி
யிருந்தால், உடல் கோயிலில் இருந்தாலும்
உள்ளம் கடவுளுக்கு வெகு தூரத்தில் இருக்கும்

என்பது குருநானக் வாக்கு.

ஐம்பெரும் பாவங்களில் ஒன்று குடிப்
பழக்கம்

என்பது தமிழ்ச் சான்றோர்களின் கருத்து.

இந்தியா குடியினாற் பாழ்படுகிறது

என்பது காந்தியடிகளின் வாக்கு.

குடி அறிவாளிகளால் வெறுக்கப்படுவது எதன் பொருட்டு? எனின், அது அறிவை இழக்கச் செய்கின்ற ஒரு பொருள் என்பதன் பொருட்டு எனக் கூறலாம். குடி மனிதனை மனிதத் தன்மையிலிருந்து விலக்கி வைத்துவிடுகிறது. குடித்ததும் அவன் பேயாகவோ, பிசாசாகவோ, குரங்காகவோ, வேறு விலங்காகவோ காணப்படுகிறான். குடிகாரனை அறிஞர்கள் வெறுப்பதற்குக் காரணம். அவன் சமூகத்திற்குப் பயன்படாமல் அழிந்து போய் விட்டான் என்பதனால் மட்டுமல்ல; அவன் தீமைகளைச் செய்யப் புதிதாகத் தோன்றியிருக்கிறான் என்பதனாலும் ஆகும்.

பாவச் செயல்களில் சூதாடுதலும் ஒன்று எனினும் தமிழறிஞர்களால் குறிக்கப் பெற்றுள்ள பெரும்பாவம் ஐந்தில் குடியிருக்கக் குடிக்கு உரிமை கிடைத்திருக்கிறது. பாவம், சூது அங்கும் வெற்றி பெறாமல் தோல்வியடைந்து விட்டது.

‘பொய், கொலை, கள், களவு, காமம் என்பவைகளே தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப் பெற்றுள்ள ஐம்பெருந் தீமைகளாகும். அதிலும் ‘கள்’ வலதுபுறம் இரண்டையும்,