பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குடியும் குறளும்

45


முதற் கேள்வி:

கள்ளுண்டவனுடைய தோற்றம், தள்ளாடும் நடை விலகும் உடை, உளறும் பேச்சு, குழறும் நா ஆகியவைகளைக் கண்டு பிறர் கைகொட்டிச் சிரித்து ஏளனம் பண்ணுகின்ற காட்சியைக்கண்ட ஒரு குடியன், ‘நாமும் கள்ளுண்டபோது இப்படித்தானே இருப்போம்’ என்று எண்ண மாட்டானா? எண்ணினால், அவன் திரும்பவுங் குடிப்பானா?

கள்ளுண்ணாப் போதில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொள் உண்டதன் சோர்வு?

என்பது அவரது முதற்கேள்வி.

இரண்டாவது கேள்வி :

எவ்வளவு பெரிய குற்றத்தைச் செய்தாலும் பெற்ற தாய் பொறுத்துக் கொள்ளுவாளாம். பெரியவர்கள் எவ்வளவு சிறிய குற்றமாக இருந்தாலும் பொறுக்கமாட்டார்களாம். இது பெற்ற தாய்க்கும் பெரியோர்க்கு வள்ளுவர் கூறும் இலக்கணமாகும்.

‘பெற்ற தாயின் முன்புகூடக் குடிகாரன் வெறுக்கப்படுவானானால், அறிவாளிகளாகிய பெரியோர்கள் முன் குடிகாரன் என்ன ஆவான்?’ என்று நம்மைக் கேட்கிறார்.

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுக்
சான்றோர் முகத்துக் களி?

இது இரண்டாவது கேள்வி:

இதற்கு நாம் என்ன விடை கூறுவது? இதிலிருந்து நமக்குத் தெரிவது என்னவெனில், எந்தக் குற்றஞ் செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் தாய்கூட, தன் மகன் குடிகாரனாய்ப் போனான் என்று அறிந்தால் வெறுத்து விடுவாள் என்பதே. பெற்ற தாய் தன் மகனை ஏன்