பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4


குறள் புதைபொருள், ஐந்து செல்வங்கள், மும்மணிகள், நான்மணிகள், அறிவுக்கு உணவு, வானொலியிலே ஆகிய பத்து நூல்கள் எழுதியுள்ளார்கள். திருக்குறள் கட்டுரைகள் பதினோராவது நூல். ‘வள்ளுவர் உள்ளம்’ விரைவில் வெளிவர இருக்கிறது.

கி. ஆ. பெ. வி. யின் நூல்கள் அனைத்தையும் தமிழ் மக்களுக்கு வழங்கும் வாய்ப்பைப் பாரி நிலையம் பெற்றிருக்கிறது. இதை நாங்கள் பெறுதற்கரிய பெரும் பேறாகக் கருதுகிறோம். எங்கள் பால் அன்பு பூண்டு தமது நூல்கள் அனைத்தையும் எங்கள் நிலைய வாயிலாகத் தந்துதவுவதற்காக திரு. விசுவநாதன் அவர்களுக்கு எங்கள் வணக்கமும் நன்றியும் உரியன.

திரு. விசுவநாதன் அவர்களின் குடும்பம் பெருங்குடும்பம். அங்கு திருமணங்களும் பிற விழாக்களும் அடிக்கடி நிகழ்வதுண்டு. அப்போது எல்லாம் அழைப்பிதழ்கள் வரும். ஒவ்வொரு அழைப்பிதழிலும் அடியில் ஒரு குறிப்பு இருக்கும். “சீர், மொய் பரிசு பணமுடிப்பு முதலியன விலக்கப்பட்டிருக்கின்றன” என்பதே அக் குறிப்பு. விசுவநாதன் அவர்கள் தமிழ்ப் பெருமக்களிடமிருந்து, பொன்பொருள் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் உயிர் என மதிப்பது ஒழுக்கம், கடமை, பணியாற்றல் முதலிய சிறந்த பண்புகளை. அவர்கள் உள்ளம் ஒவ்வொரு கணமும் நினைந்து எதிர்பார்ப்பது உறங்கிக் கிடக்கும் தமிழகம் விழித்தெழுகின்ற நன் நாளை. அவர்களுடன் சேர்ந்து ‘தமிழ் நாட்டின் பொற்காலம் மீண்டும் தோன்ற உழைப்போம்’ என்று உறுதி கொள்வோம். அவர்களின் பேச்சுக்களைக் கேட்டும் நூல்களைப் படித்தும் அவற்றின் வழி நடப்போமாக!

வாழ்க தமிழ்!

12-11-58

தங்கள் அன்புள்ள,

சென்னை-108

பாரி நிலையத்தார்