பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பீலிபெய் சாகாடு

51


வேலை செய்யும் ஆட்களிடத்தில் தமது அதிகாரத்தைக் காட்டி மிரட்டுவதற்கும் ஒரு அளவு உண்டு. அளவுக்கு மீறி விடுமானால் அச்சு முறிவதுபோல அதிகாரமும் முறிந்துவிடும் என்ற கருத்தும், அதில் மறைந்துதான் காணப்படுகிறது.

தொழிலாளிகளின் உழைப்பிலிருந்து வருகின்ற வருமானத்தை அடைவதற்கும் ஒரு எல்லையிருக்க வேண்டும் அது அளவுக்கு மீறிவிடுமானால், மயில் தோகைகளின் கட்டுப்பாட்டினால் இரும்பு அச்சும் முறிந்து போவதுபோல “தொழிலாளர்களின் ஒற்றுமையினால் முதலாளித்துவமும் முறிந்துவிடும்” என்ற சமதர்மக் கொள்கையும் இதில் சார்ந்துதான் இருக்கிறது. அரசன் தன் குடிமக்களின் மீது செலுத்தும் ஆதிக்கத்திற்கும் ஒரு அளவு இருக்கவேண்டும். அளவுக்கு மீறி விடுமானால் “சடசடவென்று” அச்சு முறிவதைப்போல, “ஜார் ஆட்சியாயிருந்தாலும் முறிந்துவிடும்” என்ற பொதுவுடைமைக் கொள்கையும், இக் குறளில் புகுந்து கொண்டுதான் இருக்கிறது.

கட்டுரை எழுதுவதற்கும் ஒரு அளவு இருக்கவேண்டும். அளவுக்குமீறி நீண்டுவிடுமானால், அச்சு முறிவது போல அது படிப்போரின் மனதையும் முறித்துவிடும் என்ற கருத்தும் இக் குறளில் அடங்கித்தான் இருக்கிறது.

வள்ளுவர் எப்படி? அவர் செய்த திருக்குறள் எப்படி? இக்குறள் எப்படி? இதில் கூறியுள்ள கருத்துக்கள் எப்படி? மயில் தோகை மற்றவர்களுக்குப் பயன்பட்டது எப்படி? திருவள்ளுவருக்குப் பயன்பட்டது எப்படி? இத்தகைய திருக்குறளைப் படிக்காமல் இருக்கிறோமே நாம் எப்படி?

“நமது நாடு தமிழ்நாடு. நமது மொழி தமிழ்மொழி. நமது வாழ்வும் வளமும் உரிமையும் உயிரும் தமிழ். நாம் தமிழர்கள். வள்ளுவர் நமது முன்னோரில் ஒருவர். குறள்