பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

திருக்குறள் கட்டுரைகள்


களாக முடியும். இதில் எந்த ஒன்று குறைந்தாலும் அவனுக்குப் பத்துப் புள்ளிகளைக் குறைத்து விடவேண்டியதுதான். ஒன்பது உடைமைகள் உள்ளவன் 90 புள்ளி உடைய மனிதன். ஐந்து உடைமைகள் உள்ளவன் ஐம்பது புள்ளி மனிதன். மூன்று உடைமைகளை உடையவன் முப்பது புள்ளி மனிதன். ஒரே உடைமை உள்ளவன் பத்துப்புள்ளி மனிதன். அதுவும் அற்றவன் மனிதனே அல்லன். அவன் வெறும் கூடு என்பது வள்ளுவரது கருத்து.

இப்பத்து உடைமைகளையும் பத்து அதிகாரங்களாக்கி ஒவ்வொன்றுக்கும் பத்துக் குறள்கள் வீதம் இவ்வுடைமைகளை ஆசிரியர் திருள்ளுவர் நன்கு விளக்கிக் கூறியுள்ளார். இதில் பண்புடைமையை நூறாவது அதிகரமாக வைத்திருப்பது வியப்பிற்குரியதொன்றாகும். இதிலிருந்து முழு மனிதன் பண்போடு வாழ்வான் என்று தெரிகிறது.

999 குறள்களைக் கூறி, 1000ம் என்ற எண்ணிக்கையிட்டுக் கூறியுள்ள குறள் ஒன்று மக்கள் உள்ளத்தையெல்லாம் ஊடுருவிப் பாய்வதுபோல் காணப்படுகிறது.

பால் உடலுக்கு நலம் தரும் ஒரு பொருள். இதில் மாறுபட்ட கருத்து எவருக்கும் இருக்கக் காரணமில்லை. என்றாலும் நல்ல பாலைக் கெட்ட பாத்திரத்தில் வைத்தால் என்ன ஆகும்? பண்பில்லாத மக்களிடத்தில் உள்ள செல்வம் கெட்ட பாத்திரத்தில் ஊற்றிய பாலைப்போல் திரிந்து கெடும் என்பது வள்ளுவர் கருத்து.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் கன்யால்
கலந்தீமை யாற்றிரிங் தற்று

என்பதே அக்குறள் இக்குறளிற் பெருஞ்செல்வம் என்று ஆசிரியர் குறிப்பிடுவது, பெரும்பயன் விளைக்கும் திரண்ட செல்வத்தையே. பண்பில்லா மக்களிடத்துச் சேர்ந்துள்ள பெருஞ்செல்வமே கெடும் எனின், சிறு செல்வத்தைப் பற்றிக் கூறவேண்டுவதில்லை.