பக்கம்:திருக்குறள் கட்டுரைகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உடையர் எனப்படுவது...!

57


வேண்டுமானால், உள்ளத்தில் ஊக்கம் தோன்றியாக வேண்டும்.

ஆகவே, எண்ணுங்கள். நன்றாக எண்ணுங்கள். நல்லதை எண்ணுங்கள். பெரியதை எண்ணுங்கள். ஊக்கத்தோடு எண்ணுங்கள். “ஏன்?” எனில், “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்பது பொய்யா மொழி. “எப்போது?” எனில் எண்ணியவர் திண்ணியராகும் போது தான்.

படியுங்கள் மற்றொருமுறை இக்குறளை.

உடையர் எனப்படுவது ஊக்கம்; அஃதிலார்
உடையது உடையரோ மற்று?

எப்படி இக்குறள்? பிற குறள்களையும் படியுங்கள். அவற்றின் ஆழ்ந்த கருத்துக்களை யெல்லாம் உங்கள் உள்ளத்தே பதித்து வையுங்கள். சிந்திப்பதைச் சிந்தித்து, செய்வதை ஊக்கத்தோடு செய்து, சிறப்பெய்தி வாழுங்கள்.

வாழட்டும் தமிழகம்!
வளரட்டும் குறள்நெறி!