பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- உயிரோவியம் 9 லாமைக் வருந்துகிறேன். உங்கள் பரிசும் எனக்கு வேண்டாம். பாதியில் திருப்பி எடுத்துக்கொண்டு போவ தற்காக என்னை மன்னிக்கவும் என்ருன். ஏன் ? உங்கள் படத்தை ஜமீன்தார் ஒருவர் இருபத் தைந்தாயிரம் விலைக்கு வாங்கிக் கொள்வதாக வாக்களித்து விட்டுப் போயிருக்சிருரே ! : அந்தப் பணம் எனக்கு வேண்டாம். என் சித்திரத்தின் மதிப்பு எவ்வளவு என்பதைக் காட்டுவதற்காகத்தான் நான் விலை போட்டிருந்தேனே தவிர, விற்பதற்காக அல்ல. நான் இதை விலைக்கு விற்க விரும்பவில்லை ' என்று கூறிவிட்டுச் சித்திரத்தை எடுத்துக்கொண்டு நேராக தமயந்தியின் வீட்டுக்குச் சென்ருன். தான் வரைந்து தன் தாயின் படத்தை, அந்த உயிரோவியத்தை, உள்ளத்தை உருக்கும் அந்தச் சோக வடிவத்தை, அந்தப் பத்தினித் தெய்வத்தை, அந்த வீட்டில் மாட்டப்பட்டிருந்த தன் தந்தையின் படத் துக்குப் பக்கத்தில் மாட்டிவிட்டான். தமயந்தி ! இந்தப் படத்தை நான் உன்னுடைய பிறந்த தினப் பரிசாக அளிக்கிறேன். இதை நீங்கள் என்றென்றும் இதோ இங்கே உள்ள இந்த போட்டோவுக்குப் யக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும். அதற்கு இஷ்ட மில்லை யென்ருல் இப்போதே ாொல்லி விடுங்கள். நான் இதை என் கையோடு எடுத்துக்கொண்டு போய்விடுகிறேன்' தமயந்திக்கும் அவள் சகோதரிக்கும் ஒன்றுமே புரிய வில்லை. பரிசாகக் கிடைத்த அந்த அற்புதமான கலே நுட்பம் மிக்க படத்தை இழப்பதற்கு அவர்களுக்கு மனம் வரவில்லை. ராஜூவின் இஷ்டப்படியே அப்படத்தை அந்த போட்டோ வுக்குப் பக்கத்திலேயே வைப்பதற்கு ஒப்புக்கொண்டார்கள். சில தினங்களுக்கெல்லாம் அந்த வீட்டுக்கு மாசிலாமணி வந்தார். மகிழ்ச்சியுடன் உள்ளே நுழைந்தவர் அங்கே தன் போட்டோவுக்குப் பக்கத்தில் தன் மனைவியின் படம் மாட்டப்பட்டிருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டார். அந்த