பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி 101, அந்தப் படத்தையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண் டிருப்பான். ஆனால் அருகில் சுடர்விட்டு எரியும் குத்து விளக்கைத் தொட்டுக் கையைச் சுட்டுக்கொண்டு அழமாட் ட்ான். இவ்வளவு புத்திசாலியான, அழகான குழந்தை அழக்கூடிய சமயங்கள் இரண்டே இரண்டுதான். அது பசி எடுக்கிறபோதும், இருட்டைக் காண்கிற போதும்தான். அது ஏனே தெரியவில்லை : இருள் என்ருல் மட்டும் அந்தக் குழந்தைக்குக் கிட்டோடு பிடிக்கவில்லை. மேலும் இரண்டு ஆண்டுகள் கடந்தன. குழந்தைக் கண்ணன் தவழும் நிலையிலிருந்து தத்தி நடக்கும் பருவத்தை அடைந்தான். மழலை மொழி மாறி அழகாகப் பேசவும் வந்துவிட்டது அவனுக்கு ! அவன் சின்னக் குழ்ந்தைதான் ; ஆயினும் அந்தக் குழந் தையின் அறிவுக் கூர்மையோ சொல்லத் தரமன்று. அம்மா ! எப்போதும் வெளிச்சமாகவே இருக்க வேண்டும். இரவெல்லாம் தீபம் எரிந்தபடியே இருக்க வேண்டும் ' என்பான். - வானத்திலே சுடர் வீசும் சந்திரனேயும். நட்சத்திரங் களையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவான் அவன். அம்மா, இன்றைக்கு ஏம்மா சந்திரனே வல்லே " இன்றைக்கு அமாவாசையடா, கண்ணு அதனல் சந்திரன் வரமாட்டான் 1’ என்பாள் அவன் தாய். "அம்மா ! இந்தக் கடவுள் அமாவாசைன்னு ஒன்றை ஏன்தான் படைச்சாரோ ?" என்று அலுத்துக் கொள்வான் கண்ணன். - ' குறையில்லாமல், குற்றமில்லாமல், க்ளங்கமில்லாமல் இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது.டா என் செல்வமே !' என்பாள் தேவகி. அம்மா, அதோ தெரிகிறதே, அது என்ன நட்சத். திரம்மா ?' -