பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி - 103. கண்ணனுக்கு வயது நாலு ஆயிற்று. ஆயி னு ம் அவனுடைய புத்திசாலித்தனத்துக்கு வயது மதிப்பிட முடியவில்லை. காலேயில் இருள் விலகி ஒளி பரவத் தொடங்குவதுதான் தாமதம். சின்னஞ்சிறு கண்ணன் தானகவே படுக்கையை விட்டு எழுந்து விடுவான். எழுந்திருக்கும்போதே தன்னு: டைய படுக்கையைச் சுருட்டிக் கொண்டு போய் அதை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பான். பிறகு குளிக்கும் அறைக்குச் சென்று பல் துலக்குவான். குளித்துவிட்டு, வேறு உடை மாற்றிக் கொள்வான். கையோடு பழைய உடை களேக் கொண்டு போய் அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் போடுவான். பிறகு பீரோக் கண்ணுடியின் முன் ஞல் நின்றுகொண்டு தானகவே தலைவாரிப் பொட்டிட்டுக் கொள்வான். அங்கிருந்து பூஜை அறைக்குள் சென்று. தெய்வப் படங்களுக்கு முன்னல் நின்றவண்ணம் கண் மூடி, கரம் குவித்துக் கடவுளை வழிபடுவான். இந்த அதிசயக் குழந்தையின் புத்தியையும் பக்தியையும் கண்டு தாயும் தந்தையுமே வியப்படைந்து போனர்கள். மாயக்கண்ணனே தங்கள் வயிற்றில் மறுபிறப்பு எடுத்து வந்து விட்டானே என எண்ணி மெய் சிலிர்த்தார்கள். கண்ணனுக்குக் காலிலே வெள்ளிச் சலங்கையும், இடுப்: பிலே தங்க அரைஞாணும், கழுத்திலே சங்கிலியும் அணி வித்து அழகு பார்த்து அகமகிழ்ந்தார்கள். அவன் குதித்து. ஒடும்போது வெள்ளிச் சதங்கையின் கிண்கிணி ஓசை கேட்டு அவர்கள் உள்ளம் பூரித்தார்கள். . நாலு ஆண்டுகள் பூர்த்தியாயின. ஒரு நல்ல நாள்பார்த்து மேளதாளத்துடன் குழந்தைக்கு அட்சராப்பியாசம் செய்து வைத்தார் சுந்தரமூர்த்தி. - ... " . . கண்ணன் தன்னுடைய தளிர்க்கரங்களில் பலகையை ஏந்திப் பள்ளிக்குச் சென்ற காட்சி ஒரு தனி அழகு பொருந்தி விளங்கிற்று. : . . . . : . . . .