பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

了_04 திருக்குறள் கதைகள் அந்த அறிவுக் குழந்தை, அழகுக் குழந்தை பள்ளிக் கூடம் போகும்போதும், வரும்போதும், ஊரார் அவனை அள்ளி விழுங்கி விடுவதுபோல் அதிசயத்துட்ன் பார்த் தார்கள். மாதங்கள் சில கடந்தன. ஒருநாள் கண்ணன் பள்ளிக் கூடத்திலிருந்து திரும்பி வந்தான். அன்று அவன் முகத்தில் வழக்கமாக உள்ள உற்சாகத்தைக் காணவில்லை. தோட்டத் துக்குச் சென்று கைகால்களைக் கழுவிக்கொண்டு உள்ளே வந்தவன் அம்மா ! எனக்குத் தலையை வலிக்கிறதம்மா ?” என்ருன். அந்த அதிர்ச்சியைத் தாங்காத தேவகி, ஐயோ, என் குழந்தைக்கு என்ன வந்து விட்டது ?’ என்று துடிதுடித்துப் போனுள். பரபரப்புடன் கணவனே அழைத்து டாக்டரைக் கூட்டி வரச் சொன்னுள். - - * கண்ணனைப் பஞ்சணையில் படுக்க வைத்து அவன் தலையைத் தன் இரு கைகளாலும் அமுக்கிப் பிடித்தாள். அவன் உடம்பு இலேசாகச் சுட்டுக் கொண்டிருந்தது. 'அம்மா, அம்மா’ என்று ஈன் சுரத்தில் முனகினன் கண்ணன். டாக்டர் வந்து கண்ணனைப் பரிசோதித்துப் பார்த்து, விட்டு, ' குழந்தைக்குக் கடும் ஜூரம் அடிக்கிறது, இன் ஜெக்ஷன் கொடுத்துவிட்டுப் போகிறேன். நாளைக்கு மறு படியும் வந்து பார்த்த பிறகுதான் என்ன ஜூரம் என்று சொல்லமுடியும்’ என்று கூறி, குழந்தையின் பொன்னன் கையைப் புண்ணுக்கிவிட்டுச் சென்ருர். - ஊசியால் டாக்டர் தன்னைக் குத்தும்போதுகூட, கண்ணன் அழவேயில்லை. தலைவலியைப் பொறுப்பதுபோல் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டான். டாக்டர் தினம் தினம் வந்து ஊசி குத்திக் கொண் டிருந்தார். ஆனல் வாரம் ஒன்ருகியும் ஜூரம் குறைந்த பாடில்லை. ஊரிலுள்ள பெரிய் பெரிய் டாக்ட்ர்கள்ெல்லாம் வந்து பார்த்தார்கள். குழந்தை ஜூர வேகத்தில் அன்லில்