பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி 105. பட்ட இளந் துளிர்போல் துவண்டு சுருண்டு கட்டிலில் படுத்துக் கிடந்தான். அம்மா !' என்று எப்பொழுதாவது ஒரு தடவை: அழைத்து, விளக்கு, எரியறதாம்மா ?' என்று மட்டும். கேட்டுவிட்டு மீண்டும் கண்களை மூடிக் கொள்வான். கண்ணனுடைய உடல் நிலை மேலும் மோசமாகிக். கொண்டே போயிற்று. தேவகியும் சுந்தரமூர்த்தியும் குழந்தை படும் துன்பம் தாங்காமல் துடித்துப் போஞர்கள். அந்த வேதனையில் துரும்பாக இளைத்தும்விட்டார்கள்.

  • தெய்வமே ! உனக்கு நாங்கள் என்ன தீங்கு செப் தோம் ? கண்ணன் நீ கொடுத்த பிச்சை! அவனை ஏன் இப்படி வதைக்கிருய்? எங்கள் வயிற்றில் பிறக்கக்கூடிய குழந்தையா அவன் ? அவன் ஒரு தெய்வப் பிறவி அவனுக்கு ஏன் இந்தக் கொடுமை ? அவனுக்கு உயிர்ப் பிச்சை கொடு ' என்று இரு வரும் தெய்வத்தைப் பிரார்த்தனை செய்துகொண்டார்கள்.

பெற்ருேளின் பிரார்த்தனை வீண் போகவில்லை. தெய்வம் அவர்களுடைய இதயக் குமுறலுக்குச் செவி சாய்த்தது. ஒரு மாதம் கழித்துக் கண்ணன் கண் திறந்தான். கொஞ்சம் கொஞ்சம்ாக்ப் பேசவும் தொட்ங்கினன். தேவகியும் சுந்தரமூர்த்தியும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேது ? - * - & 'இன்னும் ஒரு மாதத்துக்கு அவன் எழுந்து நடமாடக் கூடாது. அதிகம் பேசச்கூடாது. பள்ளிக் கூடம் போகக் கூடாது. பிரெயின் மெனன்ஜடிஸ் என்னும் கொடிய நோய் இவனைத் தாக்கியிருக்கிறது. இவன் உயிர் தப்பிப் பிழைத்ததே புனர் ஜன்மம்' என்று கூறிய டாக்டர், தேவகியையும் அவள் கணவனையும் தனியாக ஒரிடத்துக்கு அழைத்துச் சென்ருர், -

  • இனி உங்கள் கண்ணனுடைய உயிருக்கு ஒர் ஆபத்தும் இல்லை. ஆனல் அவனுக்குக் கண் பார்வை போய்விட்டது. இந்த நோய் அவன் உயிரைக் கொண்டு போவதற்குப்