இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
'அம்மா, இந்தச் சித்திரம் எப்படி இருக்கிறது பார்த்தீர் களா !” பதினெட்டு வயது நிரம்பியராஜு தன் தாயிடம் சிறு குழந்தையைப் போல் கொஞ்சிப் பேசினன். அவன் தாயார் அவன் எழுதிய அந்தச் சித்திரத்தையே இமை கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தாள். ராஜூவின் கற்பனையில் உதித்த ஒர் உருவம் அது. வானவில்லின் வர்ணஜாலங்களை யெல்லாம் திரட்டிக் குழைத்து, தேவ கன்னியர்களின் வனப்பையெல்லாம் வடித்தெடுத்து உருவாக்கியிருந்தான் அந்த எழில் உருவத்தை. - - ராஜூ ! இத்தகைய அழகு வாய்ந்த பெண் ஒருத்தி இந்த உலகத்தில் உண்மையாகவே வாழ்ந்து கொண்டிருந் தால் அவளைத்தான் நான் உனக்கு மணம் முடித்து வைப் பேன்’ என்ருள் அவன் தாய் பாகீரதி. அம்மா, இந்தக் கலியாணப் பேச்சை மட்டும் என் காதில் போடாதே. நான் ஒரு சிறந்த சித்திரக்காரளுக விளங்க வேண்டும். இதுதான் என்னுடைய வாழ்க்கையின்