I sy திருக்குறள் கதைகள் உயிரோவியத்துக்கு அடியில் ராஜூ என்று கையெழுத் திட்டிருப்பதையும் கண்டார். அந்தப் படத்தையே வெகு நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். சுவாமி, அந்தப் படத்தைப் பார்த்தீர்களா? எத்தனை அழகாயிருக்கிறது ? அந்தக் களை பொருந்திய முகத்தில் தெரியும் சோகத்தைப் பார்த்தீர்களா? இந்தப் புண்ணியவதி யாரோ? இந்த அம்மாளின் சோகத்துக்கு என்ன காரணமோ? பாவம், பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமா யிருக்கிறது. இதை எழுதியவர் ஒரு சிறந்த சைத்திரிகர். அவரிடம் என் தங்கை சித்திரம் பழகி வருகிருள். சில தினங்களுக்கு முன்னல் அவர் என் தங்கையின் பிறந்த தின விழாவுக்காக இங்கே வந்திருந்தார். அப்போது உங்கள் போட்டோவையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, இருபத் தைந்தாயிரம் பெறக்கூடிய இப் படத்தை என் தங்கைக்குப் பரிசாகக் கொடுத்து, தங்கள் போட்டோவுக்குப் பக்கத் திலேயே மாட்டி வைக்க வேண்டும் என்றும் சொல்விவிட்டுப் போளுர் என்ருள் லலிதா. லலிதாவின் சொற்கள் ஒவ்வொன்றும் அவர் இதயத்தைப் பிளந்தன. அவர் கண்களி லிருந்து கண்ணிர் பெருகியது. லலிதா, நான் வருகிறேன். இது என் மனைவியின் படம். ராஜு என்னுடைய மகன். இன்ருேடு நீ என்னே மறந்து விடு என்று கூறிவிட்டு வெளியே போய் விட்டார் மாசிலாமணி. - - - அது முதல் அவர் சென்னைக்குச் செல்வதையே அடியோடு நிறுத்திவிட்டார். இதை அறிந்த பாகீரதியின் முகத்தில் இருந்த ஏக்கம், சோகம் எல்லாம் மறைந்து விட்டன. பழைய ஆனந்தமும் களையும் அவள் முகத்தில் பரிபூரண மாகக் குடிகொண்டன. - அந்தச் சித்திரத்தின் மூலம் தனக்குக் கிடைக்க விருந்த பொருளையும், புகழையும் இழந்தது பற்றி ராஜு துளிக்கூட வருத்தப்பட வில்லை. அதை காட்டிலிலும், ஒரு நிகரற்ற செல்வத்தைத் தன் தாய்க்கு அளித்த பெருமையும் திருப்தி, யும் அவன் உள்ளத்தில் நிரம்பியிருந்தன.
பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/11
Appearance