பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொழுது புலரும் நேரம். கல்யாணியின் விழி மலர்கள் மலர்ந்தன. கொல்லைப்புறத்து மல்லி அரும்புகள் பனி நீரில் தோய்த்து பல் காட்டிச் சிரித்தன. - - "ம்மா.ஆ...' ’ என்று அழைத்தது. கொட்டிலிலிருந்த .கன்றுக்குட்டி, - - - ஆல்ை, கன்றின் குரல் கேட்டுக் கனிந்து வந்து பால் கொடுக்க அதன் தாய்ப் பசு இல்லை. - கண் விழித்த கல்யாணி கொட்டிலுக்கு ஒடிச் சென்ருள். கன்றுக் குட்டியை அன்போடு தடவிக் கொடுத்தாள். ஆதரவோடு புல் ன்டுத்துப் போட்டாள். அந்தச் சமயம் அவளுக்குத் தன்னுடைய தாயின் நினைவு தோன்றவே.துக்கம் அவள் கண்களேக் கலக்கி விட்டது. ஆம்:கல்யாணியும் தாயற்ற ஒரு சேய்தான். அம்மா என்று அன்போடு அழைப்பதற்கு அவளுக் கொரு அன்னை இல்லே, உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சி