பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 திருக்குறள் கதைகள் யின் கல்யாணத்துக்குச் சம்ம்திக்கிருரா இல்லையா என்றே புரியவில்லை ராஜாமணிக்கு. அண்ணு! எனக்குக் கலியாணமாகிவிட்டால் அப்புறம் உனக்கும் அப்பாவுக்கும் யார் சமைத்துப் போடுவார்கள் ? நீ முதலில் கலியாணம் செய்துகொண்டு உன் மனைவி இந்த வீட்டுக்கு வந்த பிறகுதான் நான் மணம் செய்துகொள் வேன். இல்லாவிட்டால் எனக்கும் கலியாணம் வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தாள் கல்யாணி. அசடே, ஆண்களுக்கு எந்த நிமிஷத்திலும் கலியாணம் ஆகிவிடும். பெண்கள் விஷயம் அப்படியில்லை. உன் மனதுக் குப் பிடித்த கணவன் கிடைக்கும்போதே கலியாணத்தை முடித்துவிடுவதுதான் நல்லது என்ருன் ராஜாமணி, அது சரி அண்ணு கலியாணத்தை யார் நிச்சயம் செய்வது ? அப்பாவோ ஒரு வழிக்கும் வரமாட்டேன் என்கிருர். இதற்கு என்ன செய்வது ?" கல்யாணி ! நீ கவலைப்படாதே. நடராஜனின் தந்தை யிடம் நானே விஷயத்தைச் சொல்லித் திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் ' என்ருன் ராஜாமணி. - . ஆமாம் : திருமணம் நிச்சயமானல் ஐயாயிரம் ரூபாயாவது வேண்டுமே அவ்வளவு பணத்துக்கு எங்கே போவது ? அப்பாவிடமும் பணம் கிடையாதே ' என்ருள் கல்யாணி. - - அவர்கள் உன்ளம் குழம்பியது. அப்போது அப்பாவின் கனைப்புக் குரல் கேட்கவே இரு வரும் பேச்சை நிறுத்தி விட்டார்கள். “ கல்யாணி, நடராஜனின் தந்தையைக் கண்டு கலியாணத்துக்கு முகூர்த்தம்கூட வைத்துகொண்டு வந்து விட்டேன். தை மாதம் பதினேழாம் தேதி முகூர்த்தம் என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தான் ராஜா மணி. * - - -