பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு 17 'சரி, அண்ணு! அப்பாவிடம் சொன்னுயா? அப்பா ஒப்புக் கொண்டாரா ? பணத்துக்கு என்ன செய்யப் போகிருய் ?’ சொன்னேன்; அப்பா சரி சரி’ என்று தலையை ஆட்டினர். அவ்வளவுதான். பணத்துக்கு என்ன செய்வ தென்று எனக்கும் புரியவில் லே' என்ருன் ராஜாமணி. நாட்கள் இயந்திரம்போல் ஓடின. சூ கூர்த்த நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. ஆ ைல் மேகநாதனே கிணற்றில் கல்லைப் போட்டதுபோல் உட்கார்ந்து கொண் டிருந்தார். அவர் முகத்தில் கடுகடுப்பும், கவலையும் எப் போதும்போல் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. 'முகூர்த்தத்துக்குத் தேதி வைத்துவிட்டுப் பணத்ததப் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் எட்கார்ந்திருக்கிருரே, அப்பா' என்று அண்ணனும் தங்கையும் யோசித்தார்கள். கலியானத்துக்கு நாலு தி ன் ங் க ளு க் கு முன்னுல் மேகநாதன் திடீரென்று வெளியே புறப்பட்டார். அன்றிரவே ஐயாயிரம் ரூபாய் பணத்துடன் வீட்டுக்குத் திரும்பி வந் தார். அண்ணனும் தங்கையும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அப்பாவுக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது?" -இதுதான் அவர்கள் ஆச்சரியத்துக்குக் காரணம். முகூர்த்தத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளில் மும்முரமாக முனைந்தார் மேகநாதன். தெருவில் பந்தல் போட்டு வாழை மரங்கள் கட்டப்பட்டன. அழைப்பிதழ்கள் அச்சடிக்கப் பட்டன. மேள வாத்தியம் முழங்கிற்று. நடராஜனுக்கும்கல்யாணிக்கும் குறித்த முகூர்த்தத்தில் ஜாம் ஜாம்' என்று விவாகம் நடந்தேறியது. - . . . - எல்லாம் முடிந்து, மறு நாள் பொழுது விடிந்தது. இதென்ன விந்தை! திடீரென்று மேகநாதனைக் காணவில்லை. அவர் படுத்திருந்த கட்டில்மீது ஒரு கடிதம் கிடந்தது. அதை எடுத்து ஆவலோடு படித்தாள் கல்யாணி. 'அன்புள்ள கல்யாணி, ராஜாமணி! இக் கடிதத்தைக் கண்டு நீங்கள் இருவரும் ஆச்சரியப் படுவீர்கள். வாழ்க்கையில் செய்யக்கூடாத ஒரு மாபெரும்