பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு 19 முதன் முதலில் நான் உங்கள் தாயை மணந்து கொண் டேன். அவளிடம் மாருத அன்பு செலுத்தினேன். அதன் பலன் என்ன தெரியுமா? அவள் என்னை இந்த உலகத்தில் தனியாகத் தவிக்கவிட்டுப் பிரிந்து போய்விட்டாள். அப் புறம் எனக்கு மிஞ்சிய செல்வங்கள் நீங்கள் இருவரும்தான். கல்யாணி, இப்போது நம் வீட்டில் வளரும் கன்றுக் குட்டியை ஈன்றெடுத்த தாய்ப் பசு ஏன் இறந்து விட்டது என்று உனக்குத் தெரியுமா ? நான் அதனிடம் அன்பு செலுத்தினேன். தினமும் புல்போட்டு ஆசையோடு வளர்த் தேன். முடிவு - அந்தப் பசு இறந்து விட்டது. நம் தோட்டத்தில் உள்ள தென்னை மரம் என்ருவது காய்த்துப் பார்த்திருக்கிருயா? இல்லையே? அது என்றுமே காய்க்காது. ஏன் தெரியுமா? நான் அதை அன்போடு தினமும் காலையும் மாலையும் தண்ணிர் ஊற்றி வளர்த்தேன். அதனுடைய பலன் அது காய்க்காமலே போய்விட்டது. இவ்வளவுக்கும் பின்னர் நான் எப்படி உங்களிடம் அன்பு செலுத்த முடியும்? என் உள்ளத்தைக் கல்லாக்கிக் கொண் டேன். அன்பற்றவனுக நடந்து கொள்கிறேன். ஆயினும் சிற்சில சமயங்களில் என் அன்பை உங்கள் மீது வெளிப்படையாகப் பொழிந்துவிட என் உள்ளம் துடிக்கும். ஆனல், அதல்ை ஏற்படக்கூடிய விபரீத முடிவுக்கு அஞ்சி அப்படியே அடக்கி விடுவேன். கடைசியில் ஒரு நாள் என் இதயத்தின் அடிவாரத்தில் அமுங்கிக் கிடந்த அந்த அன்பைச் சோதிக்கும் காலம் வந்து விட்டது. - உன் திருமண விஷயம்தான். நீயும் ராஜாமணியும் அன்று நடராஜன் விஷயமாகப் பேசிக் கொண்டிருந்ததை தான் மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தச் செய்தியைக் கேட்டபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எப்படியும் என் அன்பு மகளின் விருப்பத்தை நிறைவேற்றிவிடத் துடித்தது என் உள்ளம். ஆயினும் நானே போய்க் கலியாணத்தை நிச்சயம் செய்யவில்லை.