பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 திருக்குறள் கதைகள் என் அன்பு காரணமாக அந்தக் கலியாணம் தடைப்பட்டு விடக்கூடாதே என்ற கவலைதான். ஆனாலும் ராஜாமணி முயற்சி செய்ததை நான் தடுக்கவில்லை. சம்மதம் போலவும் சம்மதம் இல்லாது போலவும் ஜாடைமாடையாக இருந்து விட்டேன். கடைசியில் கலியாணம் நிச்சயமாயிற்று. அப்பா பணத்துக்கு என்ன செய்வார் ? என்று கவலைப் பட்டீர்கள். உங்கள் இருவருடைய தவிப்பைக் கண்டு நான் உருகிவிட்டேன். நல்ல நிலையிலிருந்து சறுக்கிவிட்ட நாணயம் தவருத ஓர் ஏழை நான். எப்படியும் உன் கலியாணத்தை நடத்தி விடுவத்ென்று முடிவு செய்தேன். பணத்துக்கு எங்கே போவது? எனக்கு ஒகு வழியும் புரியவில்லை. அமைதி இழந்து விட்டேன். メ கால் போன போக்கில் எழுந்து நடந்தேன். எப்படியோ பணத்தைக் கொண்டு வந்து உன் கலியாணத்தை நடத்தி விட்டேன். கல்யாணி! அந்தப் பணம் எப்படிக் கிடைத் தது என்று மட்டும் கேட்காதீர்கள். எப்படியோ கிடைத்தது. அவ்வளவுதான். அந்த விவரத்தை நான் சொல்வ விரும்ப வில்லை. இதுவரை என் வாழ்க்கையில் ஒரு சிறு தவறுகூடச் செய்தறியாத நான், மாபெரும் தவறு ஒன்றைச் செய்து விட்டேன். குற்றம் செய்த பிறகு - மானம் இழந்த பிறகு - இந்த உலகத்தில் நான் எப்படி வாழ முடியும்? நான் செய்த குற்றத்துக்கு நானே தண்டனை விதித்துக் கொண்டு விட்டேன். அதுதான் மரணம். என் அன்புச் செல்வங்களே! இதுதான் என் அன்பின் ரகசியம். என் மரணத்தில் ஒரு மாசு இருந்தபோதிலும் என் அன்பு மக்களின் ஆசையை நிறைவேற்றிய திருப்தி எனக்கு இருக்கிறது. அதுவே போதும் எனக்கு. இப்படிக்கு, உங்கள் அன்புள்ள அப்பா. ”