பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - திருக்ருறள் கதைகள் முகுந்த ராவைத் தெரியாதவர்கள் அந்த ஊரில் ஒரு வருமே கிடையாது. சாதுவான மனிதர். எப்போதும் சிரித்த முகம். குணத்திலோ பச்சை வாழைப்பட்டை. ராயர் கிளப் தோன்றிய பிறகு பெரிய கடைவீதி ஏற்பட்டதா, அல்லது பெரிய கடைவீதி தோன்றிய பிறகு ராயர் கிளப் ஏற்பட்டதா என்பது ஒருவருக்குமே தெரியாது. கிளப் வாசலில் உயரமான தென்னங்கீற்றுப் பந்தல். பந்தலுக்குப் பந்தல் போட்டதுபோல் ஒரு பெரிய வேப்ப மரம். பக்கவாட்டில் மூங்கில் தட்டிகள். அந்தத் தட்டி களுக்குமேலே ஒன்றன்மீது ஒன்முக ஒட்டப்பட்ட சினிமா விளம்பரப் போஸ்டர்'கள். வாசலில் நிரந்தரமாகக் கட்டப்பட்ட சிமெண்டுத் தொட்டி. அதற்குப் பக்கத்தில் ஒரு நாட்டு நாய். - - - பந்தலுக்குள் குழையும் முன்பே ராயர் நம்மைக் கவனித்து விடுவார். - - வாங்க அண்ணு, வாங்க ! எங்கே இரண்டு நாளாகக் காளுேம் ? என்று சிரித்துக்கொண்டே வரவேற்பார். இதற்குள் அவர் கைகள் மேஜைமீதுள்ள மணியை அடிக்கும்.

  • அடே பிந்து யார் வந்திருக்கா பாருட்ா. அண்ணு, வுக்குச் சூடா ரெண்டு ரவா தோசை போட்டுக்கொண்டு வாடா அதுக்கு முன்னலே ஜில்லுனு ஒரு டம்ளர்லே பான ஜலம் கொண்டு வந்து கொடு. சீக்கிரம்...ஒடியா...'

பானைத் தண்ணீர்தான? ஐஸ் வாட்டர் இல்லையா?” என்று கேட்டால், அது எதுக்கு அண்ணு ? உடம்புக்கு உஷ்ணம் பானைத் தண்ணீர் சாப்பிடுங்கள் ; சில்லென்று இருக்கும்' என்று கூறிக்கொண்டே தாமே உள்ளே சென்று, தம் கையாலேயே தண்ணீர் எடுத்துவந்து கொடுப்பார். கிளப்புக்கு வருகிறவர்கள் சும்மாப் போக மாட்டார் கள். அவரவர்கள் குடும்ப சமாசாரம், ஊர் அக்கப்போர், முனிசிபல் தேர்தல் எல்லாவற்றையும்பற்றி ராயரிடம் ஒரு ஆவர்த்தம்' பேசி முடித்துவிட்டுத்தான் செல்வார்கள்.