பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமுகு - . 23 ராயர் எந்தக் கட்சியிலும் சேர மாட்டார். பொதுவாக எதிலும் பட்டுக் கொள்ளாமல் அவரவருக்குத் தகுந்தாற் போல் பக்குவமாகப் பதில் சொல்லி அனுப்பி விடுவார். என்னய்யா ராயரே, நீரும் இத்தனை வருஷமா ஒட்டல் நடத்துகிறீரே ? ஜம்மென்று ஒரு கட்டடத்தைக் கட்டிப் போடக் கூடாதா? உமக்குப் பிறகு ஒட்டல் வைத்த வர்களெல்லாம் கட்டடம் கட்டி லிட்டார்களே ! நீர் மட்டும் இப்படி தென்னங்கீற்றுக் குடிசையிலேயே எத்தனை நாளைக்குக் காலம் கடத்தப் போகிறீர் ? என்று கேட்டால், * வேப்ப மரத்திலேயும் தென்னங்கீத்துலேயும் இருக்கிற சுகம் வேறு எதுக்கு அண்ணு வரும்? கட்டடம் அழகா இருந் துட்டாப் போதுமா ? காப்பியும் பலகாரமும் ருசியாயிருக்க வேண்டாமா ?' என்பார். அது உண்மை ; எங்கே போனலும் ராயர் கிளப் பிலே வந்து காப்பி சாப்பிட்டாத்தானே திருப்தி ஆகுது ?" என்பார் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் இன்னெரு ஆசாமி. வேருெருவர் வருவார். இதென்னய்யா, இட்லிக்கு சாம்பார் இல்லேங்கருரு உங்க ஆளு ?' என்பார் கோபமாக. சாம்பார் தீர்ந்து விட்டாலும், சாம்பார் தீர்ந்து விட்டது. சட்னிதான் இருக்கிறது என்று சொல்லமாட்டார் ராயர். கிரித்துக்கொண்டே கல்லாவை விட்டு எழுந்து சென்று அந்த ஆசாமியின் காதில் ரகசியமாக, 'உங்களுக்கு சாம்பார் இல்லேன்னு சொல்லுவோமா? - இன்றைக்கு அமாவாசை பாருங்க. வெங்காய சாம்பார் உங்களுக்கு உத வாதுன்னு சொல்லி யிருப்பான், தேங்காய்ச் சட்னி போடச் சொல்லட்டுமா ?' என்று அந்த ஆசாமிக்குக் கோபம் வராத படி இனிமையாகப் பேசி நிலைமையைச் சமாளித்து அனுப்பு வார் ! - இதற்குள் இன்னொருவர், ' என்ன ராயரே, ஒரு தோசைக்குச் சொல்லி ஒன்பது மணி நேரம் ஆவுது இங்கே ஒரு சப்ளையரும் திரும்பி வரல்லே. எழுந்து போக வேண் டியதுதான ?' என்று சத்தம் போடுவார்.