பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 திருக்குறள் கதைகள்

  • யாரு ? மருந்துக்கடை மாணிக்கமா? அவசரப்படா தீங்க தம்பி! எல்லோருக்கும் போல உனக்கும் கொடுத்துட முடியுமா ? ஸ்பெஷல் தோசையாப் போட்டிருப்பாங்க, கொஞ்சம் பொறு, இதோ முறுகலா வந்துவிடும் ' என்று சமாதானப் படுத்துவார்.

' என்ன ராயர்வாள்! வெக்கை தாங்கல்லியே, இரண்டு மின்சார விசிறி போடக் கூடாதோ ?' என்று கேட்பார் வழக்கமாக வரும் வக்கீல் குப்புசாமி அய்யங்கார், ' லார்வாளுக்கு 'பான்'லேயே இருந்து பழக்கம் ! குளு குளுன்னு வேப்பங்காற்று வீசுகிறபோது பின்சார விசிறி எதுக்கு ?' என்பார் ராயர். - இப்படி ஆளுக்குத் தக்கபடி எல்லாம் பேசி, அனேவ ரையும் திருப்தி செய்து அனுப்புவதில் கைதேர்ந்தவர் ராயர். சில மாதங்களுக்கு முன் ஒருநாள்... அதே பெரியகடை வீதியின் மற்ருெரு கோடியில் "கிருஷ்ண விலாஸ்' என்ருெரு புதிய ஒட்டல் ஆரம்ப மாயிற்று. அந்த இடத்தில் பூட்டப்பட்டுக் கிடந்த ஒரு பழைய கட்டடத்தை விலைக்கு வாங்கிப் புதுப்பித்து புதிய ஒட்டல் ஒன்றைத் தொடங்கினர் கிருஷ்ணமணி. ஆரம்ப தினத் தன்று வாசலில் வாழை மரம், பாண்டு வாத்தியம் எல்லாம் அமர்க்களப்பட்டன. . - சாம்பிராணிப் புகை, ஊதுவத்தி வாசினை, ரேடியோ சங்கீதம், மின்சார விசிறி, குளிர் பானங்கள், நிலைக் கண்ணு டிகள், எவர்சில்வர் பாத்திரங்கள், வழவழப்பான மேஜை நாற்காலிகள் இத்தனை ஆடம்பரங்களும் சேர்ந்து கிருஷ்ண விலாஸை மிகவும் கவர்ச்சிகரமாக்கின. கூட்டம் சொல்விச் சாத்தியமில்லை. முதல் நாள் அன்று எந்த ஒட்டலுக்கும்ே கூட்டம் வருவதில் வியப்பில்லே அல்லவா? அன்று ராயர் ஒட்டலில் ஈ காக்கை இல்லை. ஈ காக்கைகளெல்லாம்கூடக் கிருஷ்ஊ விலாஸுக்குப் பறந்து போய்விட்டிருந்தன ! -