பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமுகு 25 பெரிய கடை வீதியில் எத்தனையோ ஒட்டல்கள் ஆரம்ப மாகி, மூடு விழாவும் நடந்துவிட்டது. அதனுலெல்லாம் ராயர் கிளப் வியாபாரம் பாதிக்கப்பட்டதே இல்லை. ஆரம்ப தினத்தன்று எல்லாரும் அங்கே போவார்கள். மறுநாளே பழையபடி ராயர் கிளப்புக்கே திரும்பி வந்து விடுவார்கள். இது ராயருக்கு மிகவும் பழக்கமான விஷயம். தனக்குண் டான வியாபாரம் எப்போதும் நடந்துவிடும் என்பதில் அவருக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை ! புதிய ஒட்டல் முதலாளி கிருஷ்ணமணி உட்கார்ந்தி ருந்த 'காஷ் டேபிளே"க் சுற்றிப் பித்தளைக் கிராதிகள் பள பளத்தன. கிருஷ்ண விலாஸ் முதலாளி பாலக்காட்டைச் சேர்ந்தவர். ரொம்ப நல்ல மனிதர்தான். ஆளுல் சொல்லில் இதம் இருக்காது. முகத்தில் எப்போதும் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருக்கும். யாருக்கும் வணங்கி பதில் சொல்ல மாட்டார். வெட்டு ஒன்று துண்டு இரண்டாகத் தான் பேசுவார். ஒட்டல் சிப்பந்திகளிடமும் சரி, சாப்பிட வருகிறவர்களிடமும் சரி, ஒரே கண்டிப்புத்தான். இதனல் ஊரில் அவருக்குப் பொல்லாதவர் என்ற பெயர் ஏற்பட்டு நிலைத்து விட்டது. . ஒரே புழுக்சுமாயிருக்கிறது. அந்த விசிறியைக் கொஞ்சம் போடச் சொல்கிறீர்களா ?' என்று யாராவது அவரைக் கேட்டால், ஏன் ஐயா, அதோ அந்த மூலையில் விசிறி சுற்றிக்கொண்டிருக்கிறதே கண் தெரியல்லே, அங்கே போய் உட்காருங்களேன்' என்பார், முகத்தில் அறைந்த மாதிரி. ஐயா, இந்தக் காப்பிக்குப் பால் போதவில்லை. கொஞ்சம் பால் கொண்டுவரச் சொல்லுங்கள் என்று அவரிடம் யாரும் கேட்டுவிட முடியாது. காப்பிக்குப் பால் போதாதா ? அப்படியானல் எங்களுக்குக் காப்பி தயாரிக்கத் தெரியாது என்று சொல் கிறீர்களா ? உமக்குப் பால் போதவில்லையென்ருல் அது எங்கள் காப்பியின் குற்றம் இல்லை. இஷ்டமிருந்தால்