பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கமுகு r 27 திருப்பிக் கொடுக்க முடியாமல் திண்டாடுவீர். பிறகு என் ஒட்டலுக்கு வருவகையே நிறுத்திக் கொள்வீர். கையில் உள்ள பணத்துக்குத் தகுந்தபடி சாப்பிட்டால் சாப்பிடுகிற வர்களுக்கும் நல்லது ; எனக்கும் கஷ்டமில்லை. சரி ! இன்று நீர் சாப்பிட்டதற்குப் பணம் தர வேண்டாம். இனி கடன் கேட்காதீர்கள். போய்வாரும் என்று சொல்லி அனுப் பினர். அவ்வளவுதான்; அன்று அவமானம் தாங்காமல் தலையைக் கவிழ்த்துக்கொண்டே போன அந்த ஆசாமி அப்புறம் அந்த ஒட்டல் பக்கமே திரும்பவில்லை ! இப்படி எதற்கெடுத்தாலும் கண்டிப்புடன் நிர்த்தாட் சண்யமாக நடந்து கொண்ட கிருஷ்ண விலாஸ் முதலாளி தம் சுப்பந்திகள் விஷயத்திலாவது கொஞ்சம் கருணை காட்டு வாரா? அதுதான் கிடையாது. எந்த சர்வராவது கண்ணுடி டம்ளரைக் கைதவறி கீழேபோட்டு உடைத்து விட்டாலும் போதும்; அவனுடைய சம்பளப் பணத்தில் டம்ளரின் விலையைப் பிடித்து விடுவார். நகரசபை உத்தியோகஸ்தர்கள் யார் வந்தாலும் பல்லைக் காட்டும் வழக்கம் அவரிடம் கிடையாது. ஒரு கப் காபி இனமாகக் கொடுக்கும் வழக்கமும் கிடையாது. ரூல்படி எல்லாம் செய்து வைத்து விடுவார். எந்த அதிகாரிக்கும் பயப்படமாட்டார். இதல்ை கிருஷ்ண விலாஸ் முதலாளியை ஒருவருக்குமே பிடிக்கவில்லை. ' என்ன மனுஷன் ஐயா அவர் ? கொஞ்சங்கூட தாட்சண்யமில்லாமல் பேசுகிருர் என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். கிருஷ்ண விலாஸுக்குப் போவதையும் கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார்கள். - நாளடைவில் அந்த ஒட்டலில் வியாபாரம் குறைந்தது. ஆரம்ப காலத்தில் இருந்த களையும் விறுவிறுப்பும் பிறகு இல்லாமற் போய்விட்டது ! - - முன்போல் அங்கே சாம்பிராணி மணம் கமழ்வதில்லை. ரேடியோ பாடுவதிலை. விசிறிகள் சுழல்வதில்லை.