பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 திருக்குறள் கதைகள் கிருஷ்ணமணி அடிக்கடி சோம்பல் முறித்துக் கொட் டாவி விட்டார். - ராயர் கிளப்பில் மட்டும் எப்போதும் போல் சுறு சுறுப்பாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. வாங்க அண்ணு வாங்க அடே பிந்து அண்ணுவுக்கு டிகிரி காப்பி கொண்டு வந்து கொடுடா என்று ராயர் வழக்கம்போல் இன்முகத்துடன் குளுமையாக எல்லோரை யும் வரவேற்றுக் கொண்டிருந்தார். கடைசியில் ஒரு நாள் கிருஷ்ணவிலாஸ் வாசலில் தமுக்குத் தட்டும் ஒசை கேட்டது. கிருஷ்ணமணிக்குக் கடன் அதிகமாகி விட்டதால் கிருஷ்ணவிலாஸ் மூடப்பட்டு சாமான்கள் ஏலத்தில் விடப்பட்டன. × என்னய்யா, ராயரே, கிருஷ்ணவிலாவில் மின்சார விசிறி மலிவாக ஏலத்தில் கிடைக்கிறதே. வாங்கிப் போடுங்களேன் ' என்ருர் ஒரு வாடிக்கைக்காரர். அதெல்லாம் எதுக்கு அண்ணு ? வேப்ப மரத்திலும், தென்னங்கீற்றிலும் இருக்கிற சுகம் வருமா ?’ என்ருர் .LT fruJfT. ஒரு தோப்பு : அந்தத் தோப்பில் பற்பல விதமான மரங்கள் ஓங்கி வளர்ந்து கம்பீரமாக நின்று கொண் டிருந்தன. எல்லாம் பெரிய பெரிய மரங்கள்! வயிரம் பாய்ந்த மரங்கள். அவற்றுக்கிடையே ஒல்லியான கமுகு மரம் ஒன்றும் இருந்தது. திடீரென்று ஒருநாள் பலமான புயல் காற்று வீசியது. அந்தச் சூருவளியின் வேகம் தாங்காமல் தோப்பிலிருந்த மரங்கள் அத்தனையும் சடசடவென்று கீழே சாய்ந்துவிட்டன. ஆல்ை, காற்றின் போக்குக்கெல்லாம் வணங்கிக் கொடுத்த அந்தக் கமுகு மரம் மட்டும் அந்த இடத்தில் பழையபடியே நின்று கொண்டிருந்தது. வளைந்து கொடுப் பவர்களே இந்த உலகத்தில் வாழ முடியும் என்பதை அந்தக் கமுகு மரம் இந்த உலகுக்கு அறிவுறுத்திக்கொண்டு இருந்தது.