2 திருக்குறள் கதைக" வட்சியம். நான் சென்&னக்குப் போய்ச் சித்திரக் ச” பயிலப் போகிறேன். இதற்குத் தாங்கள்தான் எப்படியா வது தந்தையின் சம்மதம் பெற்றுத் தரவேண்டும் ' என்ருன் ராஜு. தந்தையிடமிருந்து ஆக வேண்டிய எந்த ஒரு காரி யத்தையும் தன் தாயின் மூலமாகச் சாதித்துக் கொள்வது தான் அவனுடைய வழக்கம். - - பாரேதி தன் மகன் விரும்பியபடியே அவன் தந்தை மாசிலாமணியின் சம்மதம் பெற்று அவனேச் சென்னைக்கு அனுப்பி வைத்தாள். ராஜு சென்னையில் ஒர் அறையை வாடக்ைக்கு எடுத்துக் கொண்டான். சித்திரக் கலையில் தன் முழு கவனத்தையும் ஈடுபடுத்தினன். இரவு பகலாய்க் கண் விழித்து அந்தக் கலையைப் பயின்ருன். எத்தனை எத்தனையோ சிருஷ்டிகள் ! என்னென்னெவோ முகபாவங்கள் ! உலகத்தின் ஆசாபா சங்களை யெல்லாம் பிரதிபலிக்கும் முகத் தோற்றங்கள் ! உள்ளத்தின் உணர்ச்சிகளை யெல்லாம் எடுத்துக் காட்டும் உருவகங்கள் ! சிருஷ்டிக் கடவுளே கண்டு வியக்கும் வண்ண ஒவியங்கள் ! ராஜுவின் புகழ் உச்சத்தை எட்டியது. புகழுடன் அவன் சித்திரங்களுக்கு நல்ல மதிப்பும் ஏற்பட்டது, யார் யாரோ அவன் சித்திரத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போளுர்கள். வெறும் புகழினுல் மட்டும் என்ன பயன் ? புகழுடன் பணத்தையும் விரும்பினுன் அவன். ஒய்வு ஒழிவு இன்றிச் சித்திரங்களே எழுதிக் குவித்தான். ஆயினும் அத்தனே வேலைகளுக்கிடையிலும் அவன் தன் தாயாருக்குக் கடிதம் எழுதுவதற்கு மட்டும் தவறவில்லை. 'அம்மா, நான் நந்திவனத்தைவிட்டு வந்து நாலு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. தங்களைப் பார்க்க வேண்டுமென்று மிகவும் ஆவலாயிருக்கிறேன். ஆஞ்ல் எனக்கு இங்கு ஒய்வு என்பதே துளிக்கூட இல்லை. என் சித்திரங்களுக்கு நல்ல விலை கிடைக்கிறது. நேற்றுக்கூட ஒரு ஜமீன்தாரின் படத்தை வரைந்து கொடுத்தேன்.
பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/3
Appearance