பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பஜரே கோபாலம்....... ஜல் ஜல் ' என்ற ஜாலரா சப்தத்துடன் தெருக் கோடியில் வரும்போதே, சீதாராமய்யாவின் குரல் வீதி முழுதும் நிறைந்து ஒலிக்கும். எண்பதை எட்டிப் பிடிக்கும் தள்ளாத பருவம். மனித வாழ்க்கையின் இன்ப துன்பங்களேயெல்லாம் அநுபவித்துச் சவித்துப் பழுத்துப்போன அவர் உடலில், சக்தியும் ரத்தமும் . குன்றி, சதைப் பிடிப்பெல்லாம் சுருங்கி, புருவத்தின் ரோமம் நரைத்து, செறிந்து, மங்கிக் கூசும் கண்களின் மேற்பகுதியை மறைத்துக் கொண்டிருந்தன. சதைச் சுருக்கங்கள் முகமெல்லாம் ஆழ உழுதுவிட்டிருந் தன. நாமாவளிக்கிடையே அடிக்கடி புகைந்து வரும் இருமலும் அதைத் தொடர்ந்து நாராயணு, நாராயணு : தி. க.-3