பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியார்டர் 31 போஸ்ட் மாஸ்டர் திண்ணையில் இல்லாத நேரங்களில் சீதாராமய்யா. ஜன்னல் ஒரமாகச் சென்று உள்ளே எட்டிப் பார்ப்பார். - 1 யார், சீதாராமையாவா? வாய்யா!' என்று உள் ளிருந்து ஒர் அதிகாரக் குரல் கிளம்பும். ஆமாம்...... நான்தான்...... எனக்கு ஏதாவது மணி யார்டர் உண்டா?' என்று தமது குரலே அடக்கித் தாழ்த்திப் பணிவாகக் கேட்பார் சீதாராமய்யா. 'மணியார்டர்தானே? உமக்குத்தானே ? வந்திருக் கய்யா வந்திருக்கு; உம்ம பேரன் மெட்ராஸிலே கலெக்டர் வேலை பண்ருன் பாரும், அவன் அனுப்பி யிருக்கான் ! கையெழுத்துப் போட்டு வாங்கிக்கிறீரா?” - எக்காளச் சிரிப் புடன் வெகு அலட்சியமாகவும் கேலியாகவும் கூறுவார் வரா காச்சாரி. பின்னேடு, அட, போய்யா போ, வேலை மெணல் கெட்டவரே ! மணியார்டராம், மணியார்டர் ! உமண்டு எவனய்யா மணியார்டர் அனுப்பப் போருன் திதைக் வந்து என் பிராணனை வாங்கறிரே ?. வராகாச்சாரியின் குரலில் அசட்டையும் அகம்பாவமும் பின்னிக் கொண்டிருக்கும். நிஜமாகவே என் பேரன் ஒரு நாளேக்கு எனக்கு மணி யார்டர் அனுப்பத்தான் போருன் : உம்ம கையாலேயே நீர் அதை எனக்குக் கொடுக்கத்தான் போகிறீர்!" என்பார் சீதாராமய்யா. "ஆமாம் : உம்ம பேரன் பண்ம் அனுப்பப் போருன். நீர் அதை வாங்கி மாடி வீடு கட்டப் போகிறீர். பகல் கன்வா காண்கிறீர்? இந்தக் காலத்திலே பெற்ற அப்பனையே பிள்ளை காப்பாற்ற மாட்டேங்கருன். எவனே பேரனும், தாத்தாவைக் காப்பாத்தப் போருளும். பட்டணத்திலே, அவன் எங்கே ததிங்கினத்தோம் போட்டுக் கொண் டிருக்கிருனே? மணியார்டர் அனுப்புவாளும் மணியார்டர் ? அனுப்புவான், அனுப்புவான். பார்த்துக்கொண்டே இரும். கேட்டுக்கொண்டே இரும்’ என்பார் போஸ்ட் மாஸ்டர்.