பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியார்டர் 35 நான் சேர்த்து வெச்சிருந்தேன். ' கிழவர் அவன் பேச்சை நம்பவில்லை. 'பொய் ! உண் மையைச் சொல் , எங்கேயோ போய்த் திருடிக்கொண்டு வந்திருக்கே !’’-தாத்தாவின் முகத்தில் கோபமும் ஆத் திரமும் பொங்கிக் கொண்டிருந்தன. இல்லை தாத்தா, நிஜமாச் சொல்றேன். நான் சேர்த்து வெச்சிருந்தேன்.' அவர் நம்பவில்லை. ஆவேசத்துடன் எழுந்து போய் ரங்குடுவைப் பளிர் என்று கன்னத்தில் அறைந்து, அவன் பிடரியைப் பிடித்துக் குடிசைக்கு வெளியே வேகமாகத் தள்ளிவிட்டு, திருட்டுப் பயலே, இந்த வீட்டுக்குள் இனி காலடி வைக்கப் போறே ! பிச்சை எடுக்கறது கேவலமாப் போச்சு உனக்கு திருடறது உத்தமத் தொழிலா ?’ என்று கதவைச் சாத்திக் கொண்டார். திருடியாவது தாத்தாவின் கஷ்டத்தைத் தீர்க்க விரும்பினன் ரங்குடு. ஆல்ை தாத்தாவோ அவனே அடித்துத் துரத்தி விட்டார். - . அழுதுகொண்டே வெளியே சென்ற ரங்குடு அன்று போனவன்தான்; பிறகு அவன் அந்தக் குடிசைக்குத் திரும்ப வேயில்லை. தாத்தா குமுறிக் குமுறி அழுதார். ரங்குடு, எங்கே போனே ?' என்று ஏக்கத்தோடு கதறினர். ' பிச்சை எடுக்கிறது கேவலம் இல்லையா தாத் தா?” என்று என்னைக் கேட்டாயே ரங்குடு, நீம்ட்டும் திருட லாமா?” என்று தூக்கத்தில் வாய் பிதற்றினர். - நிஜம்மா சொல்றேன் தாத்தா! நான் தெரியாமல் திருடிவிட்டேன். இனிமேல் நான் திருடவே மாட்டேன்.' -ரங்குடுவின் இந்தக் கெஞ்சும் குரல் அவர் இதயத்தைப் பிளந்தது. . இந்தச் சம்பவம் நடந்து பத்து வருடங்கள் ஆகி விட்டன. - - - இப்போது ரங்குடு எங்கே இருக்கிருனே ? என்ன செய்கிருனே ? அவன் ரொம்பப் பெரியவகை வளர்ந்திருப் பான். படித்துப் பாஸ் செய்திருப்பான். பட்டணத்திலே