பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணியார்டர் - 37 அதே சமயத்தில் அவருடைய காலால் மிதிபட்ட பாம்பு "புஸ்ஸென்று சீறிக்கொண்டு அவர் கால்மீது பாய்ந்து பிடுங் கியது. ‘ ஆ, ஐயோ !” என்று அலறிக்கொண்டே கீழே சாய்ந்து விட்டார் கிழவர். அப்போது அந்த வழியாக வந்த சிலர் சீதாராமய்யா பாம்பு கடித்துக் கீழே விழுந்து கிடப்பதைத் கண்டு விட்டு ஓடிவந்து அவரைத் துர்க்கிக் கொண்டு போஸ்ட் மாஸ்ட ரிடம் விரைந்தார்கள். என்ன? சீதாராமய்யாவைப் பாம்பு கடிச்சுட்டுதா ?” - பதறிஞர் வராகாச்சாரி, பரபரப்புடன் வேட்டியைக் கிழித்து மந்திரத்தை ஜபித்தார். காலம் கடந்துவிடவே, மந்திரத்துக்குப் பலன் இல்லாமற் போய்விட்டது. சீதாராமய்யா என்றென்றும் மீளமுடியாத நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டார். நம்பிக்கை நிறைந்த, சலன. மற்ற அவர் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந் தார் வராகாச்சாரி. எதற்குமே கலங்காத அவரது கண்களிலிருந்து கண்ணிர் கொட்டிக் கொண்டிருந்தது. சீதாராமய்யாவின் உயிரற்ற உடல் அவரைப் பார்த்துக் கேட்டது: எனக்கு ஏதாவது மணியார்டர் உண்டா ? என் பேரன் ரொம்ப நல்ல பையன்...... கட்டாயம் மணியார்டர் அனுப்புவான்.” வரர்காச்சாரியின் இதயம் குமுறிப் பொங்கிற்று. காரணம் : அன்று நிஜமாகவே சீதாராமய்யாவுக்கு ஒரு மனியார்டர் வந்திருந்தது. அவருடைய பேரன் ரங்குடு தான் அனுப்பியிருந்தான் ! - . . . . ஒரு மணிக்குமுன் சீதாராமய்யா வந்து கேட்டபோது எங்கேர் கவனமாக, மணியார்டரும் இல்லை, மண்ணுங் க்ட்டியும் இல்லை" என்று தாம் அலட்சியமாகப் பதில் கூறி விட்டதை எண்ணி எண்ணித் துக்கப்பட்டார் வராகாச்சாரி. இப்ப என்ன சொல்றீங்க போஸ்ட் மாஸ்டர் ? என் பேரன் பணம் அனுப்பிச்சிருக்கான இல்லையா, பாரும் !'