பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - திருக்குறள் கதைகள் தமக்குக் கிடைத்த பெருமையையும் பணத்தையும் தம் குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் ஆவலுடன் அடுத்த ரயிலிலேயே ஊருக்குப் பயணமாளுர் ராமண்ணு. வீட்டுக்குச் சென்றதும் முதல் காரியமாக மகனுடைய சம்பளத்தைக் கட்டிவிடலாம் என்ற மகிழ்ச்சி அவர் உள்ளத்தில் நிரம்பி யிருந்தது. - > z ஆல்ை, வீட்டை அடைந்தபோது அவர் கண்ட காட்சி...... அங்கே, அவர் மனைவியைக் காணவில்லை ! மகன் ?... - அவனையும் காணவில்லை. இரண்டு பெண் குழந்தை களும் பட்டினியோடு ஒரு மூலையில் படுத்துக் கிடந்தன. ராமண்ணுவைக் கண்ட அந்தப் பெண் குழந்தைகளில் ஒன்று எழுந்து வந்து, "அப்பா, அண்ணு செத்துப் போயிட் டான் என்றது. அந்தச் செய்தியைக் கேட்ட ராமண்ணுவின் தலையில் வானமே இடிந்து விழுவது போலிருந்தது. மின்னல்க்ளும் நட்சத்திரங்களும் அவர் தலையைச் சுற்றிவட்டமிட்டன. அவர் தலை சுழன்றது. - அம்மா எங்கே?' என்ருர் ராமண்ணு. இதற்குள் அங்கே வந்த அடுத்த வீட்டுக்காரர், ஜூரமாகப் படுத் திருந்த உங்க மகன் நேற்று இறந்துவிட்டான். அந்த அதிர்ச்சி தாங்காமல் உங்கள் மனைவிக்கு வலி கண்டுவிட்டது. ஆசுபத்திரிக்கு எடுத்துக் கொண்டு போயிருக்கிருர்கள். மதுரைக்குத் தந்தி கொடுத்தோமே, வந்து சேரவில்லையா?" என்ருர். தாம் மட்டும் சிரிக்காமல் மற்ற எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருந்த ராமண்ணு அன்றுதான் முதல் தடவையாக வாய்விட்டுச் சிரித்தார். பின்னர் கையி லிருந்த பொன்னடையைப் பிய்த்து எறிந்தார். அப்புறம் சிரித்துக்கொண்டே இருந்தார் அவர்.