பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 திருக்குறள் கதைகள் சாரங்கா மில்லைச் சுற்றிலும் நிழல் மரங்களுக்குக் குறைவில்லை. காட்டு வாழை, துரங்குமூஞ்சி, செந்நிறப் பூக்களைக்கொண்ட கலியான முருங்கை ஆகிய பல்வேறு மரங்கள் குளிர் நிழலைப் பரப்பிக் கொண்டிருக்கும். அந்த மரங்களுக்கு அடியில்தான் தொழிலாளர்கள் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். நாய்கள் நாக்கை நீட்டிய படியே அவர்கள் உண்ணும் உணவைக் கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருக்கும். மரங்களின்மீதும், சுவர்களின் மீதும் உட்கார்ந்துள்ள காக்கைகள் மேலிருந்தபடியே எதைக் கொத்திச் செல்லலாம் என்று குறி பார்த்துக் கொண்டிருக்கும். - - - பூண்டு சேர்த்த மசாலாக் குழம்பின் நெடி சுற்றிலும் சூழ்ந்து வீசும். அன்று சங்கு ஊதியதும் தொழிலாளர்கள் அனைவரும் அவரவர்கள் வழக்கமாக உட்காரும் இடங்களில் போய் அமர்ந்து விட்டார்கள். அதோ, அந்த வேப்ப மரத்தடியில் நிற்கும் கன்னிப் பெண் யார்? அவள் யாரைத் தேடுகிருள்? யார் வரவை அத்தனை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிருள்? மில் தொழிலாளி நாராயணசாமி நிதானமாக வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் யாரையோ தேடின. *。 வழக்கமாக அவனுக்குச் சாப்பாடு கொண்டு வரும் கிழவி எங்கே? நாராயணசாமியின் வரவை எதிர்நோக்கி வேப்ப மரத்தடியில் நின்றுகொண்டிருந்த அப்பெண்ணின் கண்களில் அவனேக் கண்டதும் ஒருவித ஒளி தோன்றியது. முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலித்தது. இதழ்கள் முறு வலித்தன. . . அந்தப் பெண்ணைக் கண்டதும் நாராயணசாமிக்கு எத்தனை மகிழ்ச்சி! வேப்ப மரத்தை நோக்கி வேகமாக நடந்து சென்ருன் அவன். . -