பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 திருக்குறள் கதைகள் கண்ணம்மா கடைக்கண்ணுல் அவனைப் பார்த்தும் பார்க்காதது மாதிரிச் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு, விளையாட்டில் கவனம் செலுத்துவதுபோல் பாசாங்கு செய்தாள். "எப்போதும் தன்னைச் சிரித்த முகத்துடன் பார்க்கும் அவள் இன்று ஏன் ஒரு மாதிரியாக இருக்கிருள்?’ நாராயணசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. - அவன் அவளை அணுகிப் பேசியிருப்பான். அவள் முகம் கொடுத்துப் பேசத் தயாராயில்லாதபோது தான் மட்டும் ஏன் அவளிடம் பேச வேண்டும் ?’ என்ற எண்ணம் அவனைத் தடுத்தது. - மில் சங்கு மீண்டும் ஒலித்தது. ஆலையைவிட்டு வெளியே, வரும்போது எல்லாருக்கும் பின்னல் நிதானமாக வந்த நாராயணசாமி இப்போது எல்லாருக்கும் முன்னல் வேகமாக உள்ளே சென்ருன். . இயங்கும் விசைக் கருவிகளிலிருந்து பிரிந்த மெல்லிய் நூல் இழைகள் இடையருமல் ஓடிக் கொண்டிருந்தன. இயந்திரங்களின் பேரிரைச்சல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. நாராயணசாமி ஏதோ செய்துகொண்டே எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தான். அவனிருந்த இடத் துக்கு அடுத்த பக்கத்தில் பெண்கள் வரிசையாக அமர்ந்து வேலே செய்து கொண்டிருப்பதைக் கண்ணுடி ஜன்னல் வழி யாகக் காண முடியும். கண்ணம்மா எப்போதும் நாராயண சாமியும் தானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் கோணத்தில் உட்கார்ந்திருப்பது வழக்கம். ஆனால் இன்று மட்டும்.ஏளுே வேறு இடத்தில் போய் உட்கார்ந்திருக்கிருள்? தன்மீது அவளுக்கு என்ன கோபம்? இலேசாகத் தலையில் வெண்பஞ்சு படிந்திருக்கும் அவள் முகம் அவனுடைய மனக் கண்முன் தோன்றியது. - - 'பாவம், கண்ணம்மா கிழவியாகி விட்டால் அவள். தலை இப்படித்தான் நரைத்து வெளுத்துவிடும் 1 என்ற ஒரு விசித்திரமான எண்ணம் அவன் உள்ளத்தில் தோன்றியது.