பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 53. அதை நினைக்கும்போது அவனுக்குத் தன்னை அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. இடைவேளையில் எப்போதும் கண்ணம்மா தன்னைப் பார்க்காமல், பேசாமல், சிரிக்காமல் போக மாட்டாளே ? இன்று என்ன வந்துவிட்டது அவளுக்கு ? গুত வேளை பாப்பாவைப் பார்த்துவிட்டுக் கண்ணம்மா தப்புக் கணக்குப் போட்டிருப்பாளோ ? தினமும் சாப்பாட்டு வேளையில் கீரை மசியல் அல்லது மீன் குழம்பு என்று ஏதாவது ஒன்றைக் கொண்டு வந்து கொடுப்பாளே ? இன்று அவள் தன்னைத் திரும்பியும் பார்க்க வில்லையே ! - இன்று வேலை செய்யும் இடத்திலும் வேண்டுமென்றே இடம் மாறி உட்கார்ந்திருக்கிருள். எதையோ மனத்தில் எண்ணிக் கொண்டுதான் இப்படிப் பேசாமல் இருக்கிருள். எத்தகைய துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளக் கூடிய நாராயணசாமிக்குத் தன்னுடைய காதலி கண்ணம் மாவின் போக்கு பெரும் வேதனையை அளித்தது. 2. ஆலையின் காரியாலயப் பகுதியில் ஏதோ ஒருவித இருள் படர்ந்த சூழ்நிலையின் அறிகுறி தென்பட்டது. - மில் முதலாளி சாரங்கபாணியின் அறையிலிருந்து ஒலித்த மணி ஒசையில் எப்போதும் தொனிக்கும் இனிமை இல்லை. துயரத்தின் ஒலமாகவே தொனித்தது. - பியூன் வேணுகோபால் ஒடிச்சென்று மானேஜர் ரங்க சாமியிடம் முதலாளி அழைப்பதாகக் கூறினன். - ரங்கசாமி தயாராக வைத்திருந்த ஆலைத் தொழிலாளர் களின் பட்டியல், அவர்களுடைய சம்பளம், சர்விஸ் காலம் முதலிய விவரங்கள் அடங்கிய பைலுடன் முதலாளி அறைக்குள் புகுந்தார். இதற்குள்ளாகவே ஆபீசுக்குள் விஷயம் புகையத் தொடங்கிவிட்டது. ஆலையில் ஆள்.