பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 55 ' கூடாது, கூடாது, கூடாது '-தலேயை இப்படியும் அப்படியும் அசைத்தார் அவர். - - ஐந்நூறு பேரை ஒரு நாளும் எடுக்கக்கூடாது. நமக்கு இலாபம் என்பதே வேண்டாம். நஷ்டம் இல்லாமல் நடந்து கொண்டிருந்தால் அதுவே போதும். நஷ்டமில்லாமல் நடத்துவதற்குக் குறைந்தபட்சம் எத்தனை ஆட்களைக் குறைத் தால் போதுமோ, அவ்வளவு பேரை மட்டுமே வேலிேயி லிருந்து எடுத்தால் போதும். - அதற்கும் இதோ ஒரு கணக்குப் போட்டு வைத்திருக் கிறேன். நூற்று முப்பது பேரைக் குறைத்தால் போதும். மில்லை இலாப நஷ்டமின்றி நடத்த முடியும் ' என்ருர் மானேஜர். - " ஐந்நூறு பேரை அனுப்பிவிட்டு அதனுல் கிடைக்கும் இலாபம் எனக்கு வேண்டவே வேண்டாம். அதைக் காட்டி லும் நூற்று முப்பது பேரை மட்டுமே குறைக்கலாம். மில் மீண்டும் இலாபத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் அவர்கள் அத்தனை பேருக்கும் முதலில் வேலை கொடுத்து விடலாம். இங்கு வேலை செய்யும் மற்றத் தொழிலாளர் களின் நன்மையை உத்தேசித்து இப்போதைக்கு இந்தக் காரியத்தைச் செய்வதைத் தவிர வேறு வழியே புலப்பட வில்லை. எங்கே, இப்படிக் காட்டுங்கள் அந்த லிஸ்ட்டை ' 'என்று அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தார் சாரங் பாணி. அதில் வரிசையாக எழுதப்பட்டிருந்த பெயர்களுக் கிடையில் நாராயணசாமி என்னும் பெயரும் இருந்தது. அதைக் கண்டதும் அவர் திடுக்கிட்டார். - 1 யார், இந்த நாராயணசாமி நம் மில்லில் போர் மேயிைருந்த பாண்டுரங்கத்தின் மகன ?” "ஆமாம் ' என்ருர் ரங்கசாமி. - 'பாண்டுரங்கம் இந்த மில்லில் முப்பது வருட காலம் உழைத்து, உடல் தேய்ந்து, காச நோயால் பாதிக்கப்பட்டு எலும்புக்கூடாகி உயிர் நீத்தவன். தன் வாழ் நாளெல்லாம் இந்த மில்லின் வளர்ச்சிக்காகவே பாடுபட்டவன். நேர்மை,