பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

460 திருக்குறள் கதைகள் வடிவேலுவைக் கண்டதும் பாப்பாவின் கண்கள் கலங்கி விட்டன. அதைக் கண்ட வடிவேலு, அழாதே பாப்பா ! கவலைப்படாதே !' என்று அவளைத் தேற்றினன். ' அத்தான் ! அண்ணனை வேலையிலிருந்து நிறுத்திட் டாங்களே. அப்படின்ன நாங்க குடியிருக்கிற வீட்டையும் காலி பண்ணிடச் சொல்லுவாங்களா ?' என்று கேட்டாள் பாப்பா.

  • முதலாளி அப்படி யெல்லாம் செய்ய மாட்டாரு. அவர் ஒரு தெய்வப் பிறவி. வேலே இழந்த ஏழைத் தொழி லாளிங்களுக்கு வேறு எப்படி உதவி செய்யலாம்னுதான் யோசிச்சுக்கிட்டிருப்பாரு. நீ கவலைப்படாதே. பூ வாங்கிக் இட்டு அண்ணன் வரத்துக்கு முன்னலே நீ ஆட்டுக்குப் போய்ச் சேரு ' என்று கூறி அனுப்பிஞன்.

4 அப்போது மணி ஆறு. சாரங்கபாணி தம் பங்களாவுக்குத் திரும்பி வந்ததும் மன மள வென்று மேல் மாடிக்குச் சென்றவர் அப்படியே படுக்கையில் சாய்ந்துவிட்டார். அவர் இதயம் கனத்தது. தலையை ஏதோ ஒரு பெரும் பாரம் அழுத்தியது. செய்யக் கூடாத ஒரு குற்றத்தைச் செய்துவிட்டதாக அவர் மனம் உறுத்தியது. டடுக்கையை விட்டு எழுந்தார் ; நின்ருர், உட்கார்ந்தார். இப்படியும் அப்படியும் நடந்தார். எதிலும் அமைதி ஏற்படவில்லே. இத்தகைய ஒரு துன்பத்தை அவர் இதற்குமுன் அதுபவித்ததே இல்லை. நியாயமாகச் செய்ய வேண்டிய காரியத்தைத்தானே செய்திருக்கிருேம்? இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது ? என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டது அவர் மனம். அப்போது பங்களாவுக்கு முன்னல் மில் தொழி லாளர்களின் குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடிக் கொண் டிருப்பது அவர் காதில் விழுந்தது. மாடியிலிருந்தபடியே அவர்களை எட்டிப் பார்த்தார் அவர். குழந்தைகள் குதூகலத்தோடு ஒடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். - -