பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரோவியம் - - 5。 கண்களிலே ஏதோ ஒருவித ஏக்கம். முகத்திலே இனம் புரியாத ஒருவித சோகம். - அந்த ஏக்கமும் சோகமும் கலந்த தன்னுடைய தாயின் முகத்தை ஒரு சித்திரமாகத் திட்ட விரும்பின்ை அவன். ஆல்ை அது அத்தனை எளிதான காரியமா? அற்புதமாக வரைய வேண்டிய அபூர்வ சித்திரம் அல்லவா அது? 'தாயின் தெய்வத் திருவுருவில் எவ்விதப் பிசகும் நேர்ந்துவிடக் கூடாது. அப்படி நேர்ந்துவிட்டால் அதைவிடக் கொடிய செயல் வேறு இருக்க முடியாது. இதுவரை நான் வரைந்த சித்திரங்களையெல்லாம் காட்டிலும் மகத்தான ஒவியமாகத் திகழவேண்டும். எந்த சைத்திரிகனும் இதைக் காட்டிலும், சிறந்த ஒர் ஒவியத்தை வரைந்துவிட முடியாது என்ற அள வுக்கு அது அமைய வேண்டும்’ என்று எண்ணினன் ராஜ". அந்தச் சித்திரத்தை அவசரப்பட்டு முடித்துவிட விரும்ப வில்லை அவன். தன்னுடைய முழுத் திறமையையும் காட்டி, காலத்தையெல்லாம் அதற்காகவே ஈடுபடுத்தி வரைய வேண்டிய உன்னத உயிரோவியம் அது என்பதற்காக, அதை எழுதத் தொடங்காமலே காலம் தாழ்த்திக் கொண்டி ருந்தான் அவன். - அன்று விஜயதசமி, அவனைத் தேடி அவன் இருக்கும் அறைக்கு ஒரு பெண் வந்தாள். நல்ல அழகி. ஆல்ை அவளுடைய அழகு அவனே வசீகரிக்கவில்லை. எவ்வளவோ அழகிகளைத் தன் துாரிகையால் சிருஷ்டித்திருந்த அந்தப் புகழ் பெற்ற கலைஞனுடைய கண்ணுேட்டத்தில் அந்தப் பெண் ஒர் அழகியாகப் படவில்லை. அவன் அவளைப் பார்த்துக் கேட்டான் : நீ வந்த காரியம் ?: “ தங்களிடம் சித்திரம் கற்க, " சித்திரக் கலையை நான் யாருக்குமே இலவசமாகக் கற்பிப்பதில்லையே - - "தாங்கள் கேட்கும் பொருள் என்னவாலுைம் தயங். காமல் தருவேன். எப்படியும் தங்களிடம் சித்திரம் பயில வேண்டும். இதுவே என் லட்சியம்.'