பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் - 61 ஒரு குழந்தை கையில் மசால்வடையுடன் நின்றுகொண் டிருந்தது. மரத்திலிருந்த காக்கை ஒன்று சட்டெனப் பறந்து வந்து அக் குழந்தையின் கையிலிருந்த வடையைக் கொத்திக்கொண்டு போய்விட்டது. வடையைப் பறி கொடுத்த குழந்தை வீறிட்டு அழுதது. அந்தக் காட்சி சாரங்கபாணியின் இதயத்தை வாள்கொண்டு பிளப்பதைப் போல் இருந்தது. வேலை இழந்த அத்தனே தொழிலாளர் களும் தங்கள் வருமானம் பறிபோய் விட்டது குறித்து அழுவதுபோல் தோன்றியது அவருக்கு. அவர் கண்களில் நீர் பெருகிக் கொண்டிருந்தது. மில் குவார்ட்டர்ஸ்களில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளி லிருந்து வீசிய ஒளிக் கதிர்கள் கண்ணிர்த் துளிகளாய் மாறிச் சிதறுவதுபோல் தோன்றின. தெருக் கோடியில் போர்மேன் பாண்டுரங்கத்தின் மகன் நாராயணசாமி தலே குனிந்த வண்ணம் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்டபோது அ வ ரு க் கு உடம்பெல்லாம் என்னவோ செய்தது. சத்தியத்தின் சின்னமாக, உழைப்பின் உருவமாக, கடமையின் தோற்றமாக விளங்கிளுன் பாண்டுரங்கம். ஒழுக் கத்திலும் நேர்மையிலும் தந்தைக்கு மகன் சற்றும் தாழ்ந் தவனன்று என்ற பெயருடன் விளங்கினன் நாராயணசாமி. அவனைக் கண்டதும் பாண்டுரங்கத்தின் நினைவு வந்துவிட்டது சாரங்கபாணிக்கு. - ஒரு சமயம் சாரங்கபாணி பாண்டுரங்கத்தினிடம், உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நான் வெகு நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். எது வேண்டு மானலும் சொல்’’ என்று கேட்டபோது எனக்கு என்னங்க வேனும் ? என் மகனுக்கு உங்க மில்லிலேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து என் குடும்பத்தைக் காப்பாத்துங்க ’’ என்று திருப்தியுடன் அவன் கூறிய பதிலும் அப்போது அவர் நினைவுக்கு வந்தது. - - அந்தப் பாண்டுரங்கத்தின் மகனையா இப்போது வேலை யிலிருந்து நீக்கி அவன் குடும்பத்தைத் தத்தளிக்க விட்டு தி, க.-5 - - - - - - - - -