பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் - 63 உண்மைதான். அவர் பிள்ளைங்கறதாலே எனக்கு வேலை கொடுக்கலையா முதலாளி ? நம்ப வடிவேலுக்கு வேலை கொடுக்கலையா? இப்போ மில் நஷ்டத்துலே நடக்குது. யார் என்ன செய்ய முடியும்? மறுபடியும் இலாபம் வர ஆரம்பிச்ச தும் வேலைக்கு எடுத்துக்கறேன்னு எழுத்து மூலமாகவே வாக்குக் கொடுத்திருக்காரே. இதைவிட நியாயமா எப்படி நடந்துக்க முடியும் ? இப்போ நீ போய் அவரிடம் என்ன .ே க ட் க ப் போறே ? என்னை மறுபடியும் வேலைக்கு வைத்துக் கொள்ளணும்னு சொல்லப் போறயா? அதுக்கு நான் தயாராயில்லை. என்ளுேடு வேலை இழந்தவங்க அத்தனை பேருக்கும் வேலை கொடுத்தப்புறம்தான் நான் வேலைக்குச் சேருவேன். அதுவரைக்கும் அந்த மில் பக்கமே போக மாட்டேன்.' பக்கத்து வீட்டு முருகேசனுக்கு நாலு குழந்தைங்க. அவன் படற கஷ்டத்தை விடவா நம் கஷ்டம் பெரிசு ? மற்ற வங்க படற கஷ்டத்தை நாமும் படுவோம். உறுதியுடன், பிடிவாதத்துடன், தீரத்துடன், தன்னம்பிக்கையுடன் கூறினன் நாராயணசாமி. மாடியில் நின்றபடியே இதையெல்லாம் கேட்டுக்கொண் டிருந்த சாரங்கபாணியின் உடல் சிலிர்த்தது. நாராயண சாமியின் உணர்ச்சி மிக்க பேச்சு அவர் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தது. - - "பாண்டுரங்கத்துக்குப் பிறந்தவன் வேறு எப்படி இருப்பான் ? - வேலை இழந்து தவிக்கும் ஏழைகளின் கதியை எண்ணிய போது அவர் உடல் பதறியது. மகத்தான குற்றம் இழைத்து தீராத பழிக்கு ஆளாகி விட்டவர்போல் தம்மைத் தாமே நொந்து கொண்டார்.

  • ஸார் !' என்ற குரல் கேட்டுத் தலைநிமிர்ந்து பார்த் தார் சாரங்கபாணி. அவருடைய காரியதரிசி அங்கே கையில் ஒரு காகிதத்துடன் நின்று கொண்டிருந்தார்.

என்ன அது ? :