பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 65 ஏன் முடியாது ? இரண்டொரு பெண்களிடம் அவள் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள். - - முதலாளி செஞ்சது ரொம்ப அக்கிரமம்னு ஊரிலே பேசிக்கிருங்களே, தெரியுமா அஞ்சுகம் உனக்கு ?’’ என்று தன்னுடன் வேலை செய்யும் பெண்ணுெருத்தியுடன் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினுள் கண்ணம்மா. "ஆமாம், முதலாளி செஞ்சது ரொம்ப அநியாயம்னு தான் பேசிக்கிருங்க என்ருள் அஞ்சுகம். வேலை இழந்தவர்களில் அஞ்சுகத்தின் அண்ணனும் ஒருவன். எனவே அவளுக்கும் முதலாளிமீது கோபம் இருந்ததில் வியப்பில்லை அல்லவா? இவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த இன் ளுெருத்தி, முதலாளி ரொம்பத் தங்கமானவரு. அவர் பேரிலே என்ன தப்பு ? நஷ்டம் வந்தால் வேறு என்ன செய் வாங்களாம் ?’ என்று கேட்டாள். தன்னுடைய விரோதி ஒருவனுக்கு வேலை போனதால் ஏற்பட்ட திருப்தியில் அவள் முதலாளி பக்கம் பேசிளுள். 'உன்னை நியாயம் கேட்கல்லே. நீ சும்மா இரு என்று அவள் வாயை அடக்கினர் கண்ணம்மாவும் அஞ்சுகமும். 'அஞ்சுகம், இந்த விசயத்தை இப்படியே விட்டுவிடக் கூடாது. இன்றுவேலே இழந்தவர்களுக்கு நேர்ந்த கதிதான் நாளைக்கு நமக்கும் நேரும் ' என்ருள் கண்ணம்மா. ஆமாம் : இந்த ஆம்பிள்ளைங்களுக்கு ரோசமே இல்லையே; எல்லாரும் சும்மா இருக்காங்களே !' என்ருள் அஞ்சுகம். இருவரும் சேர்ந்து போய் நாலுபேரைத் துாண்டி விட்டர்ர்கள். அந்த நாலுபேர் தங்களுக்குத் தெரிந்தவர் களைத் துாண்டி விட்டனர். இப்படியே ஒருவருக்கொருவர் துாண்டி விட்டுக் கிளர்ச்சியை வலுக்கச் செய்தனர். கடைசி யில் எல்லாத் தொழிலாளர்களுமே முதலாளிக்கு விரோத மாகத் திரும்பும் நிலை ஏற்பட்டு விட்டது . ஆனால் இத்தனை புகைச்சலுக்கும் மறைமுகமான காரணம் கண்ணம்மாதான் என்பதை யாராலுமே அறிந்துகொள்ள முடியவில்லை.