பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 திருக்குறள் கதைகள் தொழிலாளர்கள் இடைவேளையில் சிறுசிறு கூட்டமாகப் பிரிந்து முதலாளிக்கு எதிராக என்ன ந்டவடிக்கை எடுக்க லாம் என்பதுபற்றி ஆலோசிக்கும் அளவுக்குக் குழப்பம் வளர்ந்து விட்டது. கடைசியில் லேபர் கமிஷனருக்கு ஆள் குறைப்பு விஷயத்தைத் தெரிவித்து விசாரணை நடத்தும்படி கடிதம் எழுதுவதென்று முடிவு செய்தார்கள். தான் ஊத்திவிட்ட சிறு பொறி பெருந்தீயாக வளர்ந்து விட்டதை அறிந்த கண்ணம்மாவுக்கு ஆனந்தம் தாங்க வில்லை. தன் காதலன் நாராயணசாமியைச் சந்தித்து, அவனுக் குச் சாதகமாக மில்லுக்குள் தான் செய்துவரும் இரகசியக் கிளர்ச்சியைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டு மென்று நினைத்தாள். ஆனால், அவன் அதைப்பற்றி அறிய நேர்ந்தால் தன்னையே வெறுக்கக்கூடும் என்ற பயமும் இருந்ததால் அவனைப் பார்க்காமலேயே இருந்துவிட்டாள். சாரங்கா மில் மாஜித் தொழிலாளர்களில் ஒருவன் முருகேசன். அவனும் மில்லில் வேலை இழந்த இன்னும் சிலரும் மில் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து அதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருவா யில் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனர். வழக்கம்போல் அன்றும் முருகேசன் சாப்பாட்டுக் கூடையைக் கொண்டு வந்தான். - - கண்ணம்மா அவன் தலையிலிருந்த பளுவை இறக்கிக் கொண்டே, நீங்கள்ளாம் சீக்கிரமே வேலைக்குத் திரும்பி வந்துடலாம். இம்மாதிரி கஷ்டப்படவேண்டாம்” என்ருள். 'ஏன்...? என்று ஆவலுடன் கேட்டான் அவன். ஆமாம், தொழிலாளிங்களெல்லாம் சேர்ந்து லேபர் கமிஷனருக்கு எழுதியிருக்கோம். அநேகமாக எல்லாரையும் திருப்பி வேலைக்கு வெச்சுக்கும்படிதான் உத்தரவு போடு வாங்களாம். உங்க பக்கத்து ஆட்டுக்கார ஐயாவைப் பார்த்தாச் சொல்லு என்று உற்சாகத்துடன் கூறினுள் கணனமமா.