பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் - 67

  • யாரு, நாராயணசாமி கிட்டேதானே ? இவ்வளவு நல்ல சமாசாரத்தைச் சொல்லாமல் இருப்பேனு ?’’

"ஆமாம் ; இவ்வளவு தூரத்துக்கு முயற்சி பண்ணி மேலுக்கு எழுதிப்போட்டது யாரு ?' என்று கேட்டான் முருகேசன். இங்கே வேலை செய்யற எல்லாருமேதான் முயற்சி எடுத்துக்கிட்டோம். ஏன் ? நான்தான் செஞ்சேன்னு வேணுலும் வச்சுக்கயேன் என்ருள் கண்ணம்மா. 6 மறு நாள் காலே. மணி எட்டு இருக்கும். சாரங்கா மில் ரோடு வழியாகச் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான் நாராயணசாமி. சாலையில் அவனுக்குத் தெரிந்த தொழிலாளர்களெல் லாம் சாரி சாரியாக வந்துகொண் டிருந்தார்கள். இரண்டு மைல் தூரத்தில், கூட்டுறவுப் பால் பண்ணே ஒன்று இருந்தது. அந்தப் பண்ணையிலிருந்து பால் வாங்கி, வீடுகளுக்குச் சப்ளை செய்தால் மாதம் முப்பது நாற்பது ரூபாய் கிடைக்கும் என்ற தகவலை அறிந்திருந்த கண்ணம்மா, தன் காதலனுக்காக அந்த வேலைக்கு முயன்று கொண்டிருந் தாள். அந்தப் பண்ணையில் கண்ணம்மாவின் அக்காள் புருஷன் கன்னியப்பன் மானேஜராயிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்னல் கண்ணம்மா தன் அக்காள் புருஷனைப் போய்ப் பார்த்து நாராயணசாமிக்கு அந்தப் பண்ணையில் ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கும் :படி கேட்டுக்கொண்டாள். - இப்ப ஒண்ணும் சான்ஸ் இல்லையே. பால் சப்ளை செய்யறத்துக்கு மட்டும் ஆள் தேவை. ஆன. அதுக்கும் சைக்கிள் இருக்கணும். சைக்கிள் அலவன்ஸ்னு பத்து ரூபாய் கொடுப்பாங்க. அது தவிர, படிக்கு ஓரணு கமிஷன் கொடுப்