பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 திருக்குறள் கதைகள் கறது எனக்குத் தெரியும். நம் மில் காண்டீனு க்கு நாளை யிலிருந்து நீ பால் சப்ளை செய். நானும் எனக்கு வேண்டிய பால் தயிரை இனி உன்னிடமே வாங்கிக்கிறதுன்னு முடிவு செஞ்சிருக்கேன். எனக்குத் தெரிஞ்சவங்க கிட்டேயும் சிபாரிசு செய்யறேன். இதுக்கு உனக்கு ஆட்சேபனை கிடையாதே ?’’ 'உங்க உபகாரத்துக்கு நன்றி! இதிலே ஆட்சேபனைக்கு என்ன இருக்கு ? உங்க அன்புதான் முக்கியம்' என்ருன் நாராயணசாமி.

  • நாராயணசாமி ! நான் ஒண்னு சொல்றேன் ; அதைத் தட்டமாட்டாயே?’’

சொல்லுங்க ஐயா !” இப்ப நீ இருக்கிற வீட்டுக்கு எவ்வளவு வாடகை கொடுக்கிருய் ?” - ‘* முப்பது ரூபாய். ’’ கொஞ்ச நாளைக்கு நீ வாடகையே கொடுக்க வேணும்.' அது கூட்ாதுங்க. எனக்கு மட்டும் எதுக்கு நீங்க வாடகை இல்லாமல் சலுகை காட்டனும் ? என்னை மன்னிச்சிடுங்க. இது எனக்கு இஷ்டமில்லிங்க. நான் வரேன்’ என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான் அவன். சாரங்கபாணி அதற்குமேல் பேசவில்லை. அவன் அப்பால் சென்றதும் காரியதரிசி அவர் எதிரில் வந்து நின்ருர். எங்கோ கவனமாயிருந்த சாரங்கபாணிக்குத் தம் காரியதரிசி எதிரில் வந்து நிற்பதுகூடத் தெரியவில்லை.

  • கூப்பிட்டீர்களா?' என்று குரல் கொடுத்தார் காரிய தரிசி. -

' ஆமாம் ; நம்ம குவாட்டர்ஸிலே உள்ள வீட்டுக் கெல்லாம் என்ன வாடகை ? . -

  • முப்பது ருபாய்.”*