பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 77 சாரங்கா மில் தகராறு : சர்க்கார் தலையீடு !’ ' வேலையை விட்டு அனுப்பப்பட்டவர்கள் எல்லாரையும் மீண்டும் வேலைக்கு வைத்துக் கொள்ளும்படி லேபர் கமிஷனர் உத்தரவு !’’ 9 - வாச்மென் வடிவேலு மெயின் கேட்டுக்கருகில் உட்கார்ந் தபடியே மலபார் முண்டு விற்கும் காக்கா ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்தான். - துரத்தில் பாப்பா வருவதைக் கண்டதும் வடிவேலு வுக்குக் காக்காவிடம் பேசிக்கொண்டிருக்கப் பிடிக்கவில்லை. என்வே, அவள் வருவதற்குள் எப்படியோ அவனிடம் பேச்சை முறித்து அனுப்பிவிட்டான். இன்னிக்கு என்னைப் பார்த்தா ஏதாவது புதிசாத் தெரியுதா உனக்கு ?’ என்று கேட்டாள் பாப்பா. " அப்படி ஒண்னும் தெரியல்லியே?’’ ஆமாம். உனக்கு எங்கே தெரியப் போவுது ? இந்தப் புல்லாக்கைப் பாத்தியா? எங்க அம்மாவுது இது. இத்தனை நாளாப் பெட்டியிலே இருந்தது, காலையிலே எதுக்கோ பெட்டியைத் திறந்தபோது இந்தப் புல்லாக்கு அதிலே கிடந்தது. நீதான் எடுத்துப் போட்டுக்கோயேன்"னு அம்மா சொன்னங்க, போட்டுக்கிட்டேன். எப்படி இருக்குது?’ - - - "இந்தப் புல்லாக்குக்காகவே நீ பிறந்த மாதிரி அவ்வளவு பொருத்தமா இருக்குது 1’ என்று அவள் புல்லாக்கைத் தொட்டுப் பார்க்கும் சாக்கில் வடிவேலு அவள் கன்னத்தைத் தொட்டான். - நேரமாச்சு. நான் வரட்டுமா?’ என்று அவன் கையை அப்பால் தள்ளிவிட்டாள் பாப்பா. ' எங்கே?' என்று கேட்டான் வடிவேலு. ' கடைக்கு நூல்கண்டு வாங்கப் போறேன்.: தி. க. - 6