பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 திருக்குறள் கதைகள் 10. வேலை இழந்த சாரங்கா மில் தொழிலாளர்கள் அனை வரும் நெடுஞ்சாலே ஆலமரத்தடியில் கூடியிருந்தார்கள். அவர்களைப் பார்த்து நாராயணசாமி உணர்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தான்.

  • தோழர்களே, உங்க எல்லாரையும் நான் இங்கே கூடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. நம் முதலாளிக்கு விரோதமா பெட்டிஷன் போயி ருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இது யார் செய்த வேலையாயிருந்தாலும் சரி. நாம் அவங்களைக் கண்டிக்கக் கடமைப்பட்டிருக்கோம். சமயம் கிடைக் கறப்போ லேபர் ஆபீஸ்ரிடமே எல்லாரும் கூட்டமாப் போய் முதலாளி செய்தது சரி ன்னு சொல்லிடணும். மில்லிலே நடக்கிற குழப்பத்தைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நாம் முதலாளிக்குத் துரோதம் செஞ்சவங்களாவோம். நம்ம மில்லுக்குக் கெட்ட பேர் ஏற்படறதைப் பார்த்துக்கிட்டு நாம் பேசாமல் இருக்கலாமா ? யாருடைய சூழ்ச்சிக்கும் இதிலே இடம் தரக் கூடாது. நீங்க என்ன சொல்றிங்க ???

நாராயணசாமி நீ சொல்றபடியே நடக்கறத்துக்கு, நாங்க தயார் ' என்று கூட்டத்திலிருந்த அத்தனை பேரும் குரல் கொடுத்தனர். - நீங்க இத்தனைப் பேரும் நியாய உணர்ச்சியோடு இருப்பதைப் பார்க்கறப்போ எனக்கே உற்சாகமாயிருக்குது. நம் முதலாளிக்கு இது தெரிஞ்சா ரொம்பச் சந்தோஷப் படுவாரு. அவர்மேல் எந்தவிதமான பழியும் வராமல் பார்த்துக்கறதுதான் இப்ப நம்முடைய முதல் வேலை என்று கறிவிட்டு நாராயணசாமி சைக்கிளில் ஏறி, பால் பண்ணையை நோக்கிப் புறப்பட்டான். சற்றுத்தூரம் சென்றதும் எதிரில் கண்ணம்மா வந்தாள். நாராயணசாமியை எதிர்பாராதவிதமாக அந்த இடத்தில் சந்தித்ததில் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி ! வேறு சமயமா யிருந்தால் நாராயணசாமியும் கூடச் சந்தோஷப்பட்