பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிழல் 81 டிருப்பான். இப்போது அவனுக்கு அவள்மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ' என்னங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க ? வேலை போயிட்டதுக்காகவா வருத்தப்படlங்க ? நான்தான் அதுக் கெல்லாம் வழி பண்ணிட்டேனே. சீக்கிரமே நீங்களெல்லாம் மறுபடியும் மில்லுக்கு வந்துடலாம். லேபர் ஆபீஸர் உங்க ளுக்கெல்லாம் சாதகமாக இருக்காராம் ' என்று உற்சாகம் பொங்கக் கூறினுள் அவள். நீ செய்தது பெரிய தப்பு, கண்ணம்மா சே ! உன்னை என்னவோன்னு நெனச்சேன். இவ்வளவு மோசமா நடந்துக்குவேன்னு நான் சொப்பனத்திலேயும் கருதல்லே !' -கோபமும் ஆத்திரமும் கலந்த குரலில் வார்த்தைகளை வீசினன் அவன். - ஆமாம், நான்தான் இவ்வளவுக்கும் காரணம். எல் லாம் உங்க நன்மைக்குத்தான். மில்லைக் கெடுக்கறதிலே எனக்கு என்ன இலாபம்?’’ - - " உன்னலே மில்லுக்கே கெட்ட பேரு. முதலாளிக்கே அவமானம். உன் முகத்திலே முழிக்கிறதே பாவம்.” நான் செஞ்சது நியாயமா, நீங்க சொல்றது நியாய மாங்கறது லேபர் ஆபீஸர் முடிவு சொன்னப்புறம் தெரியும். பார்த்துக்கிட்டே இருங்க.' தெரியட்டும்; அதையும்தான் பார்த்துடுவோம்; லேபர் ஆபீஸர் முடிவு ஒரு நாளும் உனக்குச் சாதகமாக இருக்காது ' என்று கோபத்துடன் கூறிவிட்டுப் போய் விட்டான் நாராயணசாமி, 11 சாரங்கபாணி கா கி த த் தி ல் ஏதோ கணக்குப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். புள்ளி விவரங்கள் இலட்சக்கணக்கில் இருந்தன. அப்போது டெலிபோனில் மில் மானேஜர் அவரை அழைத்து. "பம்பாயி லிருந்து இலட்சுமி மில் முதலாளி ஜயந்தி லால் ஜோஷி