பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 திருக்குறள் கதைகள் சாரங்கபாணி சற்று யோசித்தார். ரங்கசாமி ! நம் மில் குவார்ட்டர்ளை அப்படியே விலக்கு வாங்கிக் கொள்வ தாகக் கல்கத்தா ஆசாமி ஆபஃர் கொடுத்திருக்கிரு.ர். மூன்று இலட்சத்துக்குக் கேட்கிருர். அதை விற்றுவிடலாம்னு முடிவு செய்திருக்கிறேன். உங்க அபிப்பிராயம் என்ன ?” என்று கேட்டார். நீங்க எது செய்தாலும் அது நாலு பேருக்கு நன்மை யாத்தான் இருக்கும் என்ருர் மானேஜர். " சரி ; இப்ப நம்ம குவார்ட்டர்ஸைப் பாக்கறதுக்காக அந்தக் கல்கத்தா ஆசாமிங்க இன்னும் கொஞ்ச நேரத்திலே இங்கே வரப் போருங்க' என்று சாரங்கபாணி முடிப்பதற் குள்ளாகவே, அதோ வராங்களே, அவங்கதான் போலிருக் குது என்ருர் மானேஜர். கலகத்தாவிலிருந்து செளத்ரி என்பவரும் அவருடன் இன்னும் இரண்டு பேரும் காரில் வந்து இறங்கிஞர்கள்.

  • ’ என்ன, குவார்ட்டர் ஸைப் பார்க்கப் போவோமா ? ரெடியா?" என்று கேட்டுக்கொண்டே வந்தார் செளத்ரி.

'என்னுடைய காரியதரிசி உங்களோடு வந்து குவார்ட் ட்ர்ஸைக் காட்டுவார். நீங்க பார்த்துட்டு வரலாம். ஆமாம்; உங்களுக்குக் குவார்ட்டர்ஸ் எப்போதுமுதல் தேவை?’’ என்று கேட்டார் சாரங்கபாணி. இன்னும் பதினந்தே நாட்களில் தேவை. கல்கத்தா விலிருந்து எங்கள் ஆட்கள் வருகிருர்கள். ரொம்ப அவசரம்” என்ருர் செளத்ரி. சாரங்கபாணியின் முகம் சட்டென மாறியது. சரி, முதலில் வீடுகளைப் பார்த்துவிட்டு வாருங்கள். மற்ற விஷயங்களே அப்புறம் பேசிக் கொள்ளலாம்' என்ருர். 12. - - இச்சமயம் டெலிபோன் மணி ஒலிக்கவே, சாரங்கபாணி ரிவnவரை எடுத்து விசாரித்தார். மில்லிலிருந்து லேபர் ஆபீஸர் பேசினர்.