பக்கம்:திருக்குறள் கதைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘90 திருக்குறள் கதைகள் செய்யருப்போல் ஒரு ஸ்டோர் ஆரம்பிக்கப் போகிறேன். அந்த ஸ்டோரை நீயும் வடிவேலும்தான் பொறுப்பேற்று நடத்த வே ண் டு ம். வியாபாரத்தைப் பலப்படுத்தி ஸ்டோரை அபிவிருத்தி செய்து முடிஞ்சவரை வேலை யில்லாமலிருக்கிற தொழிலாளர்களுக்கு அதில் வேலை கொடுக்க வழி செய்யணும். இந்த ஸ்டோரை நடத்துவ தற்கு எவ்வளவு முதல் தேவையானலும் நான் போடத் தயாரா யிருக்கிறேன். தொழிலாளர்களுக்கு இந்த ஸ்டோர் மூலம் பல நன்மைகளை நீ செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் உழைப்புக்கு ஊதிய மாக நீ மாசம் நூறு ரூபாய் எடுத்துக்கொள். சீக்கிரமே ஸ்டோரை ஆரம்பித்து விடலாம். என்ன சொல்கிருய் ?’’ இத்தனை பேருக்கு உபகாரமாக இருக்கும் ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்படி நீங்க சொல்றபோது நான் ஏன் தடை சொல்லப் போகிறேன் ? உடனே ஆரம்பிச்சுடலாம் என்று மகிழ்ச்சியுடன் கூறினன் நாராயணசாமி. அடுத்த சில தினங்களுக்குள்ளாகவே ஸ்டோர் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக முனைந்தான் அவன். ஒரு நல்ல நாள் பார்த்து ஸ்டோர் ஆரம்பிக்கப்பட்டது. நாராயணசாமி காஷ் மேஜை முன் உட்கார்ந்தபடி எல்லாரையும் வரவேற்றுக் கொண்டிருந்தான். வடிவேலு பண்டங்களை ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தான். காஷ் மேஜைக்கு நேராகச் சுவரில் மாட்டப்பட்டிருந்த விநாயகர், இலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று படங்களையும் பூமாலைகள் அலங்கரித்தன. ஊதுவத்தியின் மணம் கம்’ மென்று வீசிக்கொண்டிருந்து. மில் தொழிலாளர்கள் எல்லாரும் ஸ்டோர் வாசலில் கூடி முதலாளியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். முதலாளி வந்ததும் எல்லாரும் மரியாதையுடன் எழுந்து அடக்கமாக நின்றர் கள். நாராயணசாமி தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்தி ன்ை. வடிவேலு எல்லாருக்கும் கற்கண்டு வழங்கினன். "உங்க கையாலேயே போணி செய்து ஆரம்பிச்சு வைக்க